தமிழ்நாடு

வாயில் புண் வந்துவிட்டதா? : காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய DMK IT Wing!

காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர் என்ற முறையில் அதற்கு தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும்.

வாயில் புண் வந்துவிட்டதா? : காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய DMK IT Wing!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

த.வெ.க. ஆட்சி வந்த பிறகு தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துள்ளன. காவலர்கள் தங்களைச் சோதனைக்கோ அல்லது விசாரணைக்கோ அழைத்துச் சென்றாலே பலருக்கு அச்சம் உருவாகிறது.

அந்த அளவிற்குத் த.வெ.க. ஆட்சியில் காவலர்களின் அதிகார அத்துமீறல்கள் அதிகரித்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆனால், இதுபற்றியெல்லாம் கொஞ்சம் கூடக் கவலையின்றி, சாலையில் நடப்பது, மெட்ரோ ரயிலில் செல்வது என ரீல்ஸ் வீடியோக்களை எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், காவல் நிலைய மரணங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் என தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி வலியுறுத்தியுள்ளது.

தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் சமூகவலைதைள பதிவில், ”நாகர்கோவில் சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட சபரிவர்மன் வழக்கில் கை, கால்களை கட்டி வைத்து தாக்கியது சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தி.மு.க ஆட்சிக்காலத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் முதலமைச்சர் சாரி கேட்டதைக்கூட கூட ‘சாரி மா மாடல் ஆட்சி” என கிண்டல் செய்த விஜய் இப்போது அதைக்கூட கேட்காமல் கள்ளமௌனம் காப்பது ஏன்? வாயில் புண் வந்துவிட்டதா?

முதலமைச்சர் “கோட்டு கோபால் வர்மா” ஆய்வு என்ற பெயரில் அலப்பறை மட்டும் செய்யாமல் காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர் என்ற முறையில் அதற்கு தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும்..

ஒரு படத்தை இரண்டு முறை பார்க்கும் அளவுக்கு வெட்டியாக இருக்கும் நீங்கள் இனியாவது Accountability என்றால் என்ன என்பதை அருகில் இருப்பவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்! காவல் நிலைய மரணங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories