அரசியல்

“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!

“மகளிரின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தின் பெயரை மாற்றுவது, மக்கள் நலனுக்கான நிர்வாக நடவடிக்கை அல்ல.”

“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி, மிகப்பெரிய புரட்சியில் ஈடுபட்டு வருகிறது த.வெ.க அரசு.

இளைஞர்களின் திறன்களை வளர்க்க உதவிடும் வகையில், தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்த முதல்வர் படைப்பகத்தின் பெயரில் ‘முதல்வர்’ என்ற பெயரை நீக்கி மாற்றம்.

திராவிட மாடல் ஆட்சியின் முத்தாய்ப்பு திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மாற்றம்.

‘வளர்ச்சி’ பெரிதில்லை, ‘வாய்’ போதும் என்ற மனநிலையைக் கொண்டுவந்த மாற்றம்.

காவிரி நீர் வந்தால் என்ன்.. வராவிட்டால் என்ன.. என அலட்சியப் போக்கோடு செயல்படும் மாற்றம்.

என மாறி, மாறி மக்களை வஞ்சிக்கும் மாற்றங்களை தொடர்ந்து செம்மையாக செய்து வருகிறது த.வெ.க அரசு.

“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!

அதன் தொடர்ச்சியாக, தற்போது ‘மகளிர் விடியல் பயணம்’ என்ற மகளிரின் வளர்ச்சிப் பயணத்திற்கு பெருந்துணையாக விளங்கும் திட்டத்தின் பெயரிலும், ‘விடியல்’ என்ற சொல்லை நீக்கி மாற்றம் செய்துள்ளது முதல்வர் விஜய் தலைமையிலான அரசு.

செலவே இல்லாமல் இதுபோன்ற பல மாற்றங்களை நிகழ்த்தி வரும் த.வெ.க அரசுக்கு, மழை போல், விமர்சனங்களும், கண்டனங்களும் பொழிந்து வருகின்றன.

அதன் ஒரு பங்காக, தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, தனது சமூக வலைதளப் பக்கத்தில், “பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!

மகளிரின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தின் பெயரை மாற்றுவது, மக்கள் நலனுக்கான நிர்வாக நடவடிக்கை அல்ல;

“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!

அரசியல் அடையாளங்களை அழிக்கும் முயற்சி மட்டுமே. ஒரு திட்டத்தின் வெற்றியை அதன் பெயர் தீர்மானிக்காது; அது மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய முன்னேற்றம்தான் தீர்மானிக்கும்.

பெயர் மாற்றங்களில் செலவிடும் நேரத்தையும் ஆற்றலையும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் புதிய திட்டங்களிலும், சேவைகளை வலுப்படுத்துவதிலும் செலவிட வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வேளையில், மாற்றத்திற்கான த.வெ.க அரசு, அடுத்து ‘புதுமைப்பெண்’ திட்டத்தை வெறும் ‘பெண் திட்டம்’ என வைத்தால் என்ன... என மாற்றத்தை நோக்கி சிந்தித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

banner

Related Stories

Related Stories