இந்தியா

சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜக MLA.. நடவடிக்கை கோரிய எதிர்கட்சி MLA-க்கள் 5 பேர் சஸ்பெண்ட் !

திரிபுராவில் சட்டப்பேரவையில் வைத்து ஆபாச படம் பார்த்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 5 பேரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜக MLA.. நடவடிக்கை கோரிய எதிர்கட்சி MLA-க்கள் 5 பேர் சஸ்பெண்ட் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திரிபுராவில் தற்போது மாணிக் சஹா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இங்கு கடந்த மார்ச் மாதம் இறுதியில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது 27-ம் தேதி நடைபெற்ற இரண்டாவது நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து கொண்டிருந்தனர். அந்த வேளையில் பாஜக எம்.எல்.ஏ-வான ஜதப் லால் நாத் என்பவர் தனது இருக்கையில் அமர்ந்தவாறே தன்னுடைய மொபைல் போனில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்தார்

சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜக MLA.. நடவடிக்கை கோரிய எதிர்கட்சி MLA-க்கள் 5 பேர் சஸ்பெண்ட் !

அதோடு ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்தபோதும், யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதால் அவ்வப்போது கூட்டத்தொடரையும் கவனிப்பது போல் பாசங்கம் காட்டி வந்தார். இதையடுத்து இதுதொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பாஜக எம்.எல்.ஏவுக்கு வலுத்த கண்டனங்கள் குவிந்தது. மேலும் ஒரு எம்.எல்.ஏ., அதுவும் சட்டமன்ற கூட்டத்தொடரில் வைத்து இவ்வாறு நடந்துகொள்வது வெட்கக்கேடானது என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திரிபுரா பாஜக தலைவர் ராஜிப் பட்டாச்சாரியா, 'சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும், முதல் கட்டமாக ஜதப் லால் நாத்துக்கு நோட்டீஸ் விடுக்கப்படும்’ என்றும் உறுதி அளித்தார். மேலும் பாஜக எம்.எல்.ஏ இது குறித்து அளித்த விளக்கத்தில் தனது செல்போனில் தொடர்ச்சியாக அழைப்புகள் வந்து கொண்டிருந்ததால் அதை எடுத்துப் பார்த்ததாகவும், அப்போது அதில் ஆபாச படங்கள் ஓடத் தொடங்கியதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் அவர் மீது விசாரணை வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இன்று மீண்டும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது. அப்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ. செல்போனில் ஆபாசப் படம் பார்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.

சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜக MLA.. நடவடிக்கை கோரிய எதிர்கட்சி MLA-க்கள் 5 பேர் சஸ்பெண்ட் !
சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜக MLA.. நடவடிக்கை கோரிய எதிர்கட்சி MLA-க்கள் 5 பேர் சஸ்பெண்ட் !

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகர், வேறு பிரச்னைகள் உள்ளதால் இதனை விசாரிக்க முடியாது என்றும், தங்கள் இருக்கைகளில் அமருமாறும் கூறினார். இருப்பினும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்து கோரிக்கை விடுதத்ததோடு அமளியில் ஈடுபட்டனர். இதனால் சட்டப்பேரவையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து கோபப்பட்ட சபாநாயகர், ஆபாச படம் பார்த்த பாஜக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க மறுப்பு தெரிவித்து, அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 5 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதனால் தற்போது மீண்டும் அங்கே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜக MLA.. நடவடிக்கை கோரிய எதிர்கட்சி MLA-க்கள் 5 பேர் சஸ்பெண்ட் !

ஜதப் லால் நாத் வடக்கு திரிபுராவை சேர்ந்தவர். ஆரம்பத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த இவர், கடந்த 2018 ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். அப்போது அங்கு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், சிபிஎம் வேட்பாளரும், முன்னாள் சபாநாயகருமான ராமேந்திர சந்திர தேப்நாத்துக்கு எதிராக பாஜக சார்பில் போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வியை தழுவினார்.

தொடர்ந்து இந்த முறை நடைபெற்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ-வாக பதவியேற்றுள்ளார். இந்த சூழலில் முதல்முறை MLA -பதவி வகிக்கும் ஒருவர் இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளது அம்மாநில மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கர்நாடகத்திலும், மற்ற மாநிலங்களிலும் இதே போல் சில பாஜக எம்.எல்.ஏ-கள் ஆபாச படம் பார்த்ததாக சர்ச்சையில் சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories