அரசியல்

“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!

“தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியே இல்லை, சர்க்கஸ் கூடாரம். தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்வதும், அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதும்தான் அவர்களின் நோக்கம்.”

“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில், த.வெ.க அரசின் வஞ்சிப்பு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி தி.மு.க இளைஞர் அணிச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்பேச்சு, த.வெ.க.வினருக்கு கடும் அச்சுறுத்தலாக அமைந்த நிலையில், அவரின் பேச்சைத் திரித்து, பொய் வழக்குகள் பதிவு செய்து, சென்னையிலிருந்து ஆயிரக்கணக்கான காவலர்களுடன் 400 கி.மீ அழைத்து சென்று, இறுதியாக தஞ்சை செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் வைத்து விசாரித்து, நீதிமன்றத்தின் தலையீட்டிற்கு பிறகு விடுதலை செய்தது த.வெ.க அரசின் காவல்துறை.

இதனைத் தொடர்ந்து, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பின்வருமாறு,

“இந்த த.வெ.க ஆட்சி அமைந்த பிறகு, விவசாயிகளுக்கு இழைத்த துரோகங்களை பட்டியலிட்டு, மேட்டூர் அணை திறக்கப்பட்டாததை சுட்டிக்காட்டி தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகளுக்கு ஆதரவான தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் பேசினேன்.

ஆனால், நான் பேசியதற்கு பதிலளிக்க வக்கில்லாமல், நான் பேசாத ஒரு செய்தியை Cut Copy Paste செய்து, சில செய்திகளை ADD செய்திருக்கிறார்கள்.

“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!

நான் யாரையும் தவறாக பேசவில்லை. முழுக்க முழுக்க விவசாயிகளுக்காகதான் பேசினேன். ஆனால், தவறான செய்தியை தேசிய ஊடகங்களுக்கு பரப்பி, இன்று அவதூறு பரப்பியிருக்கிறார்கள்.

நமக்கான நீரை கர்நாடகத்திடம் இருந்து கேட்டுப்பெற வக்கில்லாமல், நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க தெம்பில்லாமல் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது நமக்கு வாய்த்திருக்கிற டம்மி முதலமைச்சர் தலைமையிலான அரசு.

சென்னையில் இருந்து ஒரு தீவிரவாதியை கூட்டிச்செல்வதுபோல, 400 கி.மீ தூரம் கொண்டுசென்று, விசாரணை என்ற பெயரில் பல கேள்விகளைக் கேட்டு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த நடவடிக்கையை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்.

நான் எந்தவிதமான தவறான எண்ணத்திலும் நேற்று (ஆக.03) பேசவில்லை. யாரையும், குறிப்பாக பெண்களை தாழ்த்திப் பேச வேண்டும் என்பது துளிக்கூட எண்ணவில்லை. என் பெற்றோர் என்னை அப்படி வளர்க்கவில்லை.

“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!

எனக்கு திருமணமாகி, என் மனைவியுடன்தான் நான் வாழ்கிறேன். எனக்கு பெண் குழந்தை இருக்கிறது. எனக்கு தங்கை இருக்கிறார். அனைத்து பெண்களையும் நான் தாயாக, தங்கையாகதான் பார்க்கிறேன்.

எனக்கு இருக்கக்கூடிய ஒரே வருத்தம், சில தலைவர்கள் நான் பேசியதை முழுமையாக கேட்காமலும், ஆராயாமலும், நான் தவறாக பேசிவிட்டேன் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், நான் விவசாயிகளுக்காக பேசினேனே தவிர, வேறு எந்த தவறான எண்ணத்திலும் பேசவில்லை.

விவசாயிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக, இந்த தரம்கெட்ட அரசு என்னை கைது செய்தது. இந்த கைதுக்கு நான் என்றும் பயப்பட மாட்டேன். நான் பேசியதற்கு ஒரே பொருள்தான், அதற்கு இரண்டு பொருள் எல்லாம் இல்லை. விவசாயிகளுக்காக நான் தொடர்ந்து பேசுவேன்.

தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியே இல்லை, சர்க்கஸ் கூடாரம். தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்வதும், அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதும்தான் அவர்களின் நோக்கம்.

த.வெ.க செய்யும் திசைதிருப்பல் அரசியலை மக்கள் பார்த்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் நிச்சயம் தகுந்த பதில் அளிப்பார்கள்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் 41 உயிர்களை பலிகொடுத்துவிட்டு, பத்திரிகையாளர்களுக்கு பயந்து புறமுதுகு காட்டி, இதே திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஓடிச் சென்று வீட்டில் பதுங்கிய தைரியசாலியான முதலமைச்சர் இன்று தமிழ்நாட்டில் இருக்கிறார். ஆனால், அவரைப் போல் நாங்கள் என்றும் பயப்பட மட்டோம். மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்.”

banner

Related Stories

Related Stories