
த.வெ.க அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மக்களுக்குப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. அதிலும் தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற்ற மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 மற்றும் 6 சிலிண்டர்கள் குறித்து ஒரு வார்த்தை கூட அறிக்கையில் இடம் பெறாதது, வாக்களித்த மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம், மக்களுக்கு ஏதாவது புதிய அறிவிப்புகள் இருக்கும் என்று பார்த்தாலும் அதுவும் இல்லை. கடந்த தி.மு.க ஆட்சியில் மக்களுக்காகச் செயல்படுத்தப்பட்ட பல முக்கிய திட்டங்களின் பெயர்களை மாற்றிப் புதிய திட்டம் போல் அறிவித்துள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாற்றம் ஏற்படும் என விஜய் சொன்னார். பெயர் மாற்றம் தான் உங்களின் மாற்றமா எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
எந்தெந்த திட்டங்களுக்குப் பெயர்கள் மாற்றப்பட்டன என்பது குறித்த விவரம் வருமாறு:-
நான் முதல்வன் திட்டம் - வெற்றித் திறன் பயிற்சித் திட்டம்
உங்கள் கையில் உலகம் - வெற்றி மடிக்கணினி திட்டம்
முதல்வர் படைப்பகம் - டிஜிட்டல் நூலகம் / படைப்பகம்
கலைஞர் கனவு இல்லம் திட்டம் - வெற்றி வீடு திட்டம்
விலையில்லா மிதிவண்டி - நவீன மிதிவண்டித் திட்டம்
தகைசால் பள்ளி - பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளி
ஆடு & செம்மறி ஆடு ஊக்குவிப்புத் திட்டம் - வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்
அன்புச்சோலை திட்டம் - மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள்
நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் - மண்ணின் மகள் திட்டம்
அதோடு, கடந்த ஆட்சியில் திட்டங்களின் பெயர்களில் இருந்த முதலமைச்சர் என்ற வார்த்தையை நீக்கிய த.வெ.க அரசு, தற்போது தங்களது கட்சியின் பெயரில் இருக்கும் 'வெற்றி' என்ற வார்த்தையைப் பல திட்டங்களின் பெயர்களில் சேர்த்துள்ளது. இதுமட்டும் சரியா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.






