அரசியல்

“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

தவெக அரசு இன்று (ஆக.05) தாக்கல் செய்த பட்ஜெட்டானது 'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' ஆகத்தான் இருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

தவெக அரசு பொறுப்பேற்றபின் முதல் பட்ஜெட்டை இன்று (ஆகஸ்ட் 05) சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் தவெக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் இடம் பெற்றதோ இல்லையோ, திராவிட மாடல் அரசில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றிய மக்கள் நலத்திட்டங்களின் பெயர்களை மாற்றி அதற்கு நிதி ஒதுக்கியுள்ளனர்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் 2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், 'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு!

அதுமட்டுமல்ல, இது திராவிட மாடல் அரசின் திட்டங்களின் Remake Version budget!

“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்!

அதுமட்டுமல்ல,

- ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை,

- வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம்,

- ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்,

- முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்!

மொத்தத்தில்,

சொந்தமாகவும் யோசிக்காத -

சொன்னதையும் செய்யாத -

சுரத்தில்லாத - புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது என விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories