இந்தியா

“இந்தியாவின் இசைக்குயில்” பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார் !

பிரபல பாடகி லதா லதா மங்கேஷ்கர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

“இந்தியாவின் இசைக்குயில்”  பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவின் பல்வேறு மொழிகளில் 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார் லதா மங்கேஷ்கர். பாரத் ரத்னா, பத்மபூஷன் மற்றும் மத்மவிபூஷன் உட்பட ஏராளமான உரிய விருதுகளை பெற்றுள்ளார் லதா மங்கேஷ்கர்.

92 வயதாகும் இவருக்கு கடந்த மாதம் 11ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன.

மேலும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் நிலையில், அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு, ஐசியூவில் தீவிர கண்காப்பில் இருந்து வந்தார்.

லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளார். லதா மங்கேஷ்கரின் மரண செய்தி பாலிவுட் பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories