இந்தியா

“வென்டிலேட்டர் சிகிச்சையில் லதா மங்கேஷ்கர்” : ICU கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்!

பிரபல திரைப்பட பாடகி லதா மங்கேஷ்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

“வென்டிலேட்டர் சிகிச்சையில் லதா மங்கேஷ்கர்” : ICU கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவின் பல்வேறு மொழிகளில் 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார் லதா மங்கேஷ்கர். 92 வயதாகும் இவருக்கு கடந்த மாதம் 11ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் நிலையில், அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டுள்ளது. பாரத் ரத்னா, பத்மபூஷன் மற்றும் மத்மவிபூஷன் உட்பட ஏராளமான உரிய விருதுகளை பெற்றுள்ளார் லதா மங்கேஷ்கர்.

லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமடைந்திருப்பதால், பாலிவுட் பிரபலங்கள் பலரும் அவர் விரைவில் குணமடையவேண்டும் என்று சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பாலிவுட் பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories