இந்தியா

ஓடும் பேருந்தில் அத்துமீறிய வாலிபர்.. செருப்பை கழட்டி - தக்கபாடம் புகட்டிய பெண் !

பேருந்தில் அத்துமீறிய வாலிபரைக் காலணியால் பெண் ஒருவர் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓடும் பேருந்தில் அத்துமீறிய வாலிபர்.. செருப்பை கழட்டி - தக்கபாடம் புகட்டிய பெண் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலம், பாதாமி என்ற பகுதியில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்போது, பேருந்து மதுபோதையில் இருந்த வாலிபவர் ஒருவர் அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப்பெண் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், தனது காலணியைக் கழட்டி அந்த வாலிபரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் துணிச்சலுடன் வாலிபருக்கு தக்க தண்டனை வழங்கிய அந்த பெண்ணுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் பேருந்தில் பயணித்தவர்கள் அந்த வாலிபரைப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலிஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories