தமிழ்நாடு

நீக்கப்படும் ‘மு’ : “உங்கள் ஆஸ்தான ஜோதிடர் எதுவும் அறிவுறுத்தி உள்ளாரா?” -விஜய்க்கு திமுக இளைஞரணி கேள்வி!

அரசின் திட்டங்கள் மக்களின் குறைகள் தீர்த்து அவர்களை மகிழ்விக்க வேண்டுமே ஒழிய ‘மு’கம் சுளிக்க வைக்க கூடாது என்று திமுக இளைஞரணி விமர்சித்துள்ளது.

நீக்கப்படும் ‘மு’ : “உங்கள் ஆஸ்தான ஜோதிடர் எதுவும் அறிவுறுத்தி உள்ளாரா?” -விஜய்க்கு திமுக இளைஞரணி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

விஜய் தலைமையிலான தவெக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது. குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு பெருமளவு கேள்விக்குள்ளாகியுள்ளது. ஆங்காங்கே சிறுமிகள் முதல் வயதான பாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வரும் சம்பவம் ஒரு புறம் மக்களை உலுக்க, மற்றொரு பக்கம் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படியான சூழலில் சட்டம் ஒழுங்கை சரி செய்யாமல், மக்களுக்கான நலத்திட்டங்களில் கவனம் செலுத்தாமல், திமுக மீது விமர்சனம், பொய் குற்றச்சாட்டு, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதும், குதிரை பேரம் மூலம் மற்ற கட்சியினரை தங்கள் கட்சிக்கு இழுப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

அதோடு ஆட்சியின் லட்சணத்தையும், பாதுகாப்பையும் குறிப்பிட்டு கேட்டால், அதற்கு பதில் சொல்லாமல், மடைமாற்றம் செய்து வருவதையும் வாடிக்கையாக வைத்து வருகிறார் விஜய். மேலும் கடந்த ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கும் தங்கள் பெயரை வைத்து ஸ்டிக்கர் ஒட்டுகிறது தவெக. இப்படியான சூழலில் அண்மையில் நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசு, 'முதல்வர் படைப்பக'த்தின் பெயரை படைப்பகம் என்று குறிப்பிட்டுள்ளது கண்டனங்களை எழுப்பி வருகிறது.

நீக்கப்படும் ‘மு’ : “உங்கள் ஆஸ்தான ஜோதிடர் எதுவும் அறிவுறுத்தி உள்ளாரா?” -விஜய்க்கு திமுக இளைஞரணி கேள்வி!

அந்த வகையில் இதுகுறித்து திமுக இளைஞரணி வெளியிட்டுள்ள கண்டன பதிவு வருமாறு :-

தமிழ்நாடு முதலமைச்சர் என்பதை இனி ‘தமிழ்நாடு —-------------’ என்று குறிப்பிட ஆயத்தமாகிவிட்டதா தவெக அரசு?

திராவிட மாடல் அரசால் முன்னெடுக்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரை மாற்றிய ஆமை வேக சோஃபா மாடல் அரசு, நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு சிறந்த, நவீன கற்றல் சூழலை உருவாக்கும் நோக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ‘முதல்வர் படைப்பகத்’தை ‘படைப்பகம்’ என்று பெயர் மாற்றியுள்ளது.

ஆட்சிப்பொறுப்புக்கு வந்த நாள் முதல் ஊடகங்களை சந்திக்காமல் வாய் கட்டு போட்டிருக்கும் முதலமைச்சர், தான் மேடைபோட்டு முழங்கிய திட்டங்களை சரிவர செயல்படுத்த முன்வராமல் தி.மு.கழக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களை முடக்கும் நோக்கில் செயல்படுவது காழ்ப்புணர்வின் உச்சம்.

நீக்கப்படும் ‘மு’ : “உங்கள் ஆஸ்தான ஜோதிடர் எதுவும் அறிவுறுத்தி உள்ளாரா?” -விஜய்க்கு திமுக இளைஞரணி கேள்வி!

சபாநாயகர் முதல் சோஃபா மாடல் அரசின் அமைச்சர்கள் வரை ‘தமிழ்நாடு முதலமைச்சர்’ என்றால் அது எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் என்ற எண்ணப்போக்கில் இருப்பதால், முதல்வன், முதல்வர் என்ற பெயர்களை எல்லாம் முடக்க நினைக்கிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது. மாநிலத்தின் உச்ச பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு இவ்வளவு தாழ்வு மனப்பான்மை தேவையற்றது.

அல்லது ‘மு’ வில் தொடங்கும் சொற்களை இந்த ஆட்சியில் எந்த திட்டங்களுக்கும் சூட்டக்கூடாது, சூட்டிய பெயர்களும் தொடரக் கூடாது என தனது ஆஸ்தான ஜோதிடர் எதுவும் அறிவுறுத்தி உள்ளாரா என்று ‘மு’தலமைச்சரோ அல்லது ‘மு’தல்போட்ட அமைச்சரோ தெளிவுபடுத்த வேண்டும்.

அரசின் திட்டங்கள் மக்களின் குறைகளை தீர்த்து அவர்களை மகிழ்விக்க வேண்டுமே ஒழிய ‘மு’கம் சுளிக்க வைக்க கூடாது. Sticker அரசியலைக் கடந்து உருப்படியாக எதையாவது இந்த அரசு முன்னெடுக்க வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

banner

Related Stories

Related Stories