இந்தியா

”கல்யாணத்த கிராண்டா நடத்தனும்” - வங்கி கொள்ளையனின் பதிலால் அதிர்ந்து போன போலிஸ்; கர்நாடகாவில் பகீர்!

திருமணமாக இருந்தவர் பட்டப்பகலில் வங்கியில் ஊழியர்களை மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்ற நிகழ்வு கர்நாடகாவில் நடந்திருக்கிறது.

”கல்யாணத்த கிராண்டா நடத்தனும்” - வங்கி கொள்ளையனின் பதிலால் அதிர்ந்து போன போலிஸ்; கர்நாடகாவில் பகீர்!
Jana Ni
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தனது திருமணத்தை எந்தவொரு கடனும் இல்லாமல் ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டு வங்கியில் புகுந்து கொள்ளையடித்த நிகழ்வு கர்நாடகாவில் நடந்திருக்கிறது.

கடந்த செவ்வாயன்று (ஜன.,18) பிற்பகல் 2.30 மணியளவில் ஹூப்ளி கொப்பிகர் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கிக்குள் முகமூடி அணிந்தபடி கையில் கத்தியுடன் நுழைந்திருக்கிறார்.

அப்போது வங்கி மேனேஜர், காசாளர் மற்றும் சில வாடிக்கையாளர்கள் இருந்திருக்கிறார்கள். காசாளரிடம் சென்ற அந்த முகமூடி அணிந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி அங்கிருக்கும் பணம் முழுவதையும் தான் கொண்டு வந்த பையில் போடும்படி பணித்திருக்கிறார்.

உயிருக்கு பயந்த அந்த காசாளர் பணத்தை முகமூடி கொள்ளையன் வசம் கொடுத்திருக்கிறார். வங்கியை விட்டு அந்த கொள்ளையன் சென்றதும் அலறியடித்தபடி வெளியே வந்து காசாளர் கூச்சலிட்டதை அவ்வழியேச் சென்ற போலிஸார் கவனிக்க விவரம் அறிந்ததும் முகமூடி கொள்ளையனை பிடிக்க துரத்திச் சென்றிருக்கிறார்.

அப்போது போகும் வழியில் இதனைக் கண்ட அப்பகுதியில் இருந்த டிராஃபிக் போலிஸாரும் கொள்ளையனை துரத்தியிருக்கிறார். பொதுமக்கள் சிலரும் போலிஸாருக்கு உதவியிருக்கிறார்கள்.

போலிஸாரின் துரித செயலால் கிட்டத்தட்ட 10 முதல் பதினைந்தே நிமிடங்களில் வங்கியில் கொள்ளையடித்த முகமூடி நபர் பிடிபட்டிருக்கிறார். மேலும் அவரிடம் இருந்து 6.39 லட்ச ரூபாயும் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

”கல்யாணத்த கிராண்டா நடத்தனும்” - வங்கி கொள்ளையனின் பதிலால் அதிர்ந்து போன போலிஸ்; கர்நாடகாவில் பகீர்!

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது விஜயப்புராவைச் சேர்ந்த 33 வயதான ப்ரவீன் குமார் என்றும், அவர் மைசூரில் உள்ள டிவிஎஸ் கம்பெனி ஊழியர் என்பதும் தெரியவந்திருக்கிறது. ஜனவரி 21ம் தேதி திருமணம் நடைபெற இருந்திருக்கிறது.

ஏற்கெனவே சில கடன்கள் மட்டும் இருந்ததால் தனது திருமணத்தை கடன் ஏதும் இல்லாமலும் ஆடம்பரமாகவும் நடத்த திட்டமிட்டிருக்கிறார். அதன் காரணமாகவே வங்கியில் கொள்ளையடித்திருக்கிறார் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கொள்ளையனை துரிதமாக பிடித்த இரண்டு போலிஸாருக்குமே டிஜிபி பிரவீன் சூட் தலா 25 ஆயிரம் பரிசாக வழங்கியிருக்கிறார்.

banner

Related Stories

Related Stories