சினிமா

TTF வாசனின் அறிமுக பாடலை பாடிய அனிருத் ? - ‘மஞ்சள் வீரன்’ படம் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் ஷாக் !

TTF வாசனின் மஞ்சள் வீரன் படத்தில் அவருக்கான அறிமுக பாடலை அனிருத் பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TTF வாசனின் அறிமுக பாடலை பாடிய அனிருத் ? - ‘மஞ்சள் வீரன்’ படம் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் ஷாக் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள முத்துக்கல்லூர் என்ற கிராமத்தை சேர்ந்த TTF வாசன், இருசக்கர வாகனத்தில் ஊர் ஊராகப் பணம் செய்து தனது அனுபவங்களை யூடியூபில் பதிவேற்றி வெளியிட்டு வருகிறார். இவரின் Twin Throttlers என்ற யூடியூப் பக்கத்திற்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பைக்கிலே ஊர் ஊராக சுற்றி அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டு வரும் இவர், பைக் ரேசர் என்பதால் தனது பைக்கில் அதிவேகமாக செல்வது போன்ற வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். பப்ளிசிட்டிக்காக இவர் செய்யும் அட்ராசிட்டிகளால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிவேகமாக வாகனம் ஓட்டி பெரும் சர்ச்சையில் சிக்கிய நிலையில், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக இரு சக்கர வாகனத்தை இயக்கியதாக TTF வாசன் மீது கோவை போத்தனூர் போலிஸார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இப்படியே இவர் பல தொந்தரவுகளை ஏற்படுத்தி வந்தார்.

TTF வாசனின் அறிமுக பாடலை பாடிய அனிருத் ? - ‘மஞ்சள் வீரன்’ படம் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் ஷாக் !

இப்படி அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதாகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியதாகவும், நம்பர் பிளேட் இல்லாமல் காரை இயக்கியதாகவும் என பல்வேறு சாலை விதிகளை மீறியதாக அவர் மீது ஏகப்பட்ட வழக்குகளில் இருக்கும் நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் போலீசுக்கு சவால் விட்டும் பிரபல பத்திரிகையாளர் ஐயப்பன் ராமசாமிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டதற்கு அவர் மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

TTF வாசனின் அறிமுக பாடலை பாடிய அனிருத் ? - ‘மஞ்சள் வீரன்’ படம் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் ஷாக் !

இவர் மீது பல்வேறு வழக்குகள் இருக்கும் சூழலில் இவர் திரைப்படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். செல்அம் இயக்கத்தில் TTF வாசன் நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு 'மஞ்சள் வீரன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் போஸ்டர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 29-ம் தேதி வெளியானது. இவர் படத்தில் நடிக்கிறார் என்றதும் அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

TTF வாசனின் அறிமுக பாடலை பாடிய அனிருத் ? - ‘மஞ்சள் வீரன்’ படம் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் ஷாக் !

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதில் நடிக்கும் கதாநாயகி மற்ற சில நடிகர்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த சூழலில் இந்த படத்தில் TTF வாசனின் அறிமுக பாடலை பிரபல பாடகர் அனிருத் பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் மேலும் குஷியில் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories