தமிழ்நாடு

நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள் நான்கு கேள்விகளுக்கு பதிலுண்டா? : விஜய்க்கு, தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

குதிரைவேக குதிரை பேரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? அல்லது, இனியும் TVK Horse Trading-இன் அடுத்த Season தொடருமா?

நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள்  நான்கு கேள்விகளுக்கு பதிலுண்டா? : விஜய்க்கு, தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில், விஜய் தலைமையிலான த.வெ.க அரசு ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே சட்டம்-ஒழுங்கு சந்திசிரித்து வருகிறது. தினமும் கொலை, கொள்ளைகள் அரங்கேறி வருகின்றன.

அதேபோல், அறிவிக்கப்படாத மின்வெட்டும் தமிழ்நாடு முழுவதும் நிலவி வருகிறது. அதோடு விலைவாசி உயர்வும் விண்ணை முட்டுகிறது. ஆனால், இவை பற்றி எல்லாம் கவலைப்படாமல் த.வெ.க அரசு, தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடக்கும் இடத்திலேயே டெண்ட் போட்டு அமர்ந்துள்ளது.

இடைத்தேர்தல் பரப்புரையிலும் இது குறித்துத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரியாகத் த.வெ.க அரசுக்குக் கேள்வி எழுப்பினார். ஆனால், இதற்குப் பதில் சொல்லாமல் விஜயோ தோல்வி பயத்தில் தெருத்தெருவாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள்! இந்த நான்கு கேள்விகளுக்குப் பதிலுண்டா…? என த.வெ.க அரசுக்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுபியுள்ளார்.

அதில், 1. பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியோரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மாவட்டச் செயலாளர்களாகவும் வைத்துக்கொண்டு முதலமைச்சர் பெண் பாதுகாவலர் போல வேடம் போடலாமா?

2. அறிவிக்கப்படாத மின்வெட்டில் இருந்து, இனி தினமும் அறிவித்துவிட்டு 8 மணிநேரம் மின்வெட்டு என்பதை நோக்கித் தமிழ்நாடு நகரவுள்ளதாக வரும் செய்திகள் உங்கள் செவிகளை எட்டவில்லையா?

3. அசையாத மரமொன்று விழுந்தது கீழே என்ற கதையாக, இடைத்தேர்தல் தோல்வியைத் தவிர்க்க நீங்கள் மணிக்கணக்கில் தெருவலம் போவது போதாமல், டிபன் கேரியரில் பணமும் போகிறதாமே? ஒரு தெருவுக்கு இவ்வளவு என வாக்குகள் விலைபேசப்படுவதாக உங்கள் ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்த கட்சிகளே குற்றம்சாட்டுவதற்குப் பதில் என்ன?

4. இத்தோடு, குதிரைவேக குதிரை பேரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? அல்லது, இனியும் TVK Horse Trading-இன் அடுத்த Season தொடருமா?

தூயசக்தி எனத் தம்பட்டம் அடித்த உங்களது ரீல் இப்படி நான்கே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டதே” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories