தமிழ்நாடு

Rapido ஓட்டுநரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்... வைரலான வீடியோ.. 3 பேர் மீது பாய்ந்த வழக்கு... - காரணம் என்ன?

புதுச்சேரியில் ரேபிடோ ஓட்டுநரை தாக்கி மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர்களின் வீடியோ வைரலான நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட 3 ஆட்டோ ஓட்டுநர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Rapido ஓட்டுநரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்... வைரலான வீடியோ.. 3 பேர் மீது பாய்ந்த வழக்கு... - காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

புதுச்சேரியில் ரேபிடோ, ஊபர், ஓலா ஆகிய ஆப் மூலம் பைக், கார், ஆட்டோ உள்ளிட்ட டாக்சி சேவை பயன்பாட்டில் உள்ளது. இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி அவர்களிடம் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது நேரடித் தாக்குதல் வரை சென்றுள்ளது.

அதன்படி நேற்று முன்தினம் புதுச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தி வீதி, ராமராஜா வீதி சந்திப்பில் பெண் சுற்றுலா பயணியை ஏற்ற வந்த ரேபிடோ ஓட்டுனரை இருசக்கர வாகனத்தில் வந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் அவரது வண்டியின் சாவியை பிடுங்கி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் அங்கு வந்து ரேப்பிடோ ஓட்டுனரை தாக்க முயற்சி செய்கின்றனர். இதனை வடமாநில பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து காவல் துறையிடம் புகார் அளிப்பதாக கூறுகிறார். ஆனால் ஆட்டோ ஓட்டுநர்கள் காவல்துறையிடம் புகார் அளித்துக் கொள்ளுங்கள் என அச்சமின்றி கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

மேலும் புதுச்சேரியில் தொடர்ந்து ரேபிடோ உள்ளிட்ட தனியார் செயலி ஓட்டுநர்கள் தாக்கப்படுவது சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், ஒதியஞ்சாலை போலீசார் பைக் டாக்சி இளைஞரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கிய ஆட்டோ டிரைவர்கள் தேவா, சஞ்சய், சாண்டன் பிரான்சுவா தவுரான் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories