சினிமா

முதல்முறையாக நடிகர் விக்ரமுடன் கைகோர்க்கும் பிரபல இயக்குனர் .. மைசூரில் கார்த்தி! #5IN1_CINEMA

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்முறையாக நடிகர் விக்ரமுடன் கைகோர்க்கும் பிரபல இயக்குனர் .. மைசூரில் கார்த்தி! #5IN1_CINEMA
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் விக்ரம்!

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ஒரு ஹிட் கொடுத்து ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். சர்கார், தர்பார் என அடுத்தடுத்து படங்கள் ஏமாற்றமளித்ததால் அவருக்கான அடுத்தப் பட வாய்ப்பும் கேள்விக்குறியானது. தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2. விரைவில் வெளியாகவிருக்கும் ‘ஜீவி 2’ ஃபர்ஸ்ட் லுக்..!

8 தோட்டாக்கள், ஜீவி, வனம் என அடுத்தடுத்து வித்யாசமான கதைக்களங்களில் நடித்து கவணமீர்த்த நடிகர் வெற்றி அடுத்து ‘ஜீவி 2’ படத்தில் கவணம் செலுத்தி வருகிறார். முதல் பாகத்தை இயக்கிய வி.ஜே.கோபிநாத் தான் இந்த பாகத்தையும் இயக்கிவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் 21ஆம் தேதி நடிகர் எஸ்.ஜே. சூர்யா வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

3. ‘நித்தம் ஒரு வானம்’ படப்பிடிப்பு நிறைவு!

அசோக் செல்வன் நடிப்பில் ஹாஸ்டல் படம் அடுத்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இதுதவிர சில படங்கள் இவர் நடிப்பில் உருவாகிவருகிறது. அதில் ரா. கார்த்திக் இயக்கத்தில் ‘நித்தம் ஒரு வானம்’ படம் உருவாகிவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதில் அசோக் செல்வன் ஜோடியாக ரிது வர்மா நடித்துள்ளார்.

4. மைசூரில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை துவங்கிய கார்த்தி!

கார்த்தி நடிப்பில் சர்தார், விருமன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் உருவாகிவருகிறது. இதில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க ரஜிஷா விஜயன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வேலைகள் தற்போது மைசூரில் நடந்து வருவதை நாயகி ராஷி கண்ணா உறுதிப்படுத்தியுள்ளார்.

முதல்முறையாக நடிகர் விக்ரமுடன் கைகோர்க்கும் பிரபல இயக்குனர் .. மைசூரில் கார்த்தி! #5IN1_CINEMA

5. மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நடிக்கும் "பகாசூரன் "!

மோகன்.G அடுத்ததாக ஜி.எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் இயக்கும் படத்திற்கு " பகாசூரன்" என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் பூஜை சேலம் அருகில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில் இன்று நடைபெற்றது. படப்பிடிப்பு திங்கள் முதல் நடைபெற உள்ளது.

banner

Related Stories

Related Stories