தமிழ்நாடு

“ஜனநாயகத்தை நிலைநாட்ட கழகம் களமிறங்கியுள்ளது” : தாராபுரம் ஆலோசனைக் கூட்டத்தில் கனிமொழி MP பேச்சு!

தி.மு.கழகத்துடன் இணைந்து, தாராபுரம் மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டுவார்கள்!

“ஜனநாயகத்தை நிலைநாட்ட கழகம் களமிறங்கியுள்ளது” : தாராபுரம் ஆலோசனைக் கூட்டத்தில் கனிமொழி MP பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் சுகன்யா போட்டியிடுகிறார். இந்நிலையில் தாராபுரம் தேர்தல் பணிமனையில் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய கனிமொழி எம்.பி ”தி.மு.க தலைவர் சிறந்த வேட்பாளரை மக்களிடம் ஒப்படைத்துள்ளதாகக் கூறிய அவர், வெற்றி பெற்ற வேட்பாளர்களையே தக்கவைக்க முடியாமல் சிலர் கட்சி நடத்தி வருவதாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய த.வெ.க அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாகக் கூறியவர்கள், தற்போது என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர் என கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்துள்ளதாகவும், மாலை நேரங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டிய அவர், “மின்வெட்டு ஏற்படுத்துபவர்களைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் எதற்காக இந்த ஆட்சி?” என சாடினார்.

சட்டம் ஒழுங்கு விவகாரத்திலும் தவெக அரசு மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர்; கொலை, பாலியல் குற்றங்கள், காவல் நிலைய மரணங்கள், ஆணவக் கொலைகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களைச் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஒன்றிய அரசுக்கு எதிராக முதல்வர் விஜய் குரல் கொடுத்துள்ளாரா? தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து தவெக கண்டனம் தெரிவித்துள்ளதா? வாக்காளர் பட்டியல் தொடர்பான விவகாரத்தில் ஏன் இதுவரை குரல் எழுப்பவில்லை? என அடுத்தடுத்துக் கேள்விகளை எழுப்பினார்.

தவெக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் குற்றம்சாட்டிய அவர்; முதலமைச்சருக்கான அறை அமைப்பதற்கான செலவு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களையும் முன்வைத்து விமர்சித்தார்.

ரூ.50-க்கு விற்ற பொன்னி அரிசி இன்று ரூ.90-க்கு விற்கிறது” எனக் குறிப்பிட்ட அவர், விலைவாசி உயர்வு குறித்து மக்கள் தற்போதைய ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்க வேண்டும் என்றார்.

“ரூ.50-க்கு விற்ற பொன்னி அரிசி இன்று ரூ.90-க்கு விற்கிறது” எனக் குறிப்பிட்ட அவர், விலைவாசி உயர்வு குறித்து மக்கள் தற்போதைய ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்க வேண்டும் என்றார்.

மேலும், சமூக வலைதளங்களில் திமுக-வினருக்கும் பெண்களுக்கு எதிராகவும் அவதூறான கருத்துகள் பதிவிடப்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், அதனை விஜய் கட்சியினர் கண்டித்துள்ளார்களா எனவும் கேள்வி எழுப்பினார்.

“நான்கு மாதமாக பியூஸ் கேரியரை யார் பிடுங்குகிறார்கள் என்று தெரியவில்லை என்றால் எதற்காக ஆட்சியில் இருக்கிறீர்கள்?” என மின்வெட்டு விவகாரத்தில் தவெக ஆட்சியாளர்களைக் கடுமையாக விமர்சித்தார்.

இறுதியாக, “மக்கள் அளித்த வாக்கின் மதிப்பை நாம் காப்பாற்ற வேண்டும்; வெற்றி பெற்ற வேட்பாளர் (அ.தி.மு.க-விலிருந்து விலகி) கட்சி மாறும் சுயநல அரசியலுக்கு மக்கள் இந்த இடைத்தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என வலியுறுத்தினார்."

மேலும், "ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்து, தாராபுரம் மக்களின் மீது திணிக்கப்பட்டுள்ள இந்த இடைத்தேர்தலில், ஜனநாயகத்தை நிலைநாட்ட கழகம் களமிறங்கியுள்ளது. தி.மு.கழகத்துடன் இணைந்து, தாராபுரம் மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டுவார்கள்" என சமூகவலைதளத்தில் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories