சினிமா

5in1_Cinema | மீண்டும் அட்லியுடன் இணைகிறாரா விஜய் ? எப்போது தெரியுமா? கசிந்தது புது தகவல்!

5in1_Cinema | மீண்டும் அட்லியுடன் இணைகிறாரா விஜய் ? எப்போது தெரியுமா? கசிந்தது புது தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. ‘யானை’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது..!

அருண்விஜய் - ஹரி காம்போவில் ரிலீஸுக்கு தயாராகிவரும் படம் ‘யானை’. அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவாணி ஷங்கர் நடித்துள்ள இந்த படத்தின் ரிலீஸை மே 6ஆம் தேதி ப்ளான் செய்திருந்தனர். ஆனால், ரிலீஸை ஜூன் 17ஆம் தேதி மாற்றி அறிவித்துள்ளது படக்குழு.

2. ஜி.வி பிரகாஷின் ‘இடிமுழக்கம்’ படம் பற்றிய புதிய அப்டேட்...

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘இடிமுழக்கம்’. இயக்குநர் சீனு ராமசாமி அவரின் இயல்பான படங்களிலிருந்து மாறுபட்டு, முதன்முறையாக கிராமப்புற பின்னணியில் ஒரு திரில்லர் படமாக இதை இயக்குகிறார்.

விறுவிறுப்பாக உருவாகிவரும் இந்த படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

3. சுந்தர்.சிக்கு வில்லனாக நடிக்கும் பாலிவுட் இயக்குனர்..!

நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர்.சி கோலிவுட்டில் பல கம்ர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் நடிப்பில் திருஞானம் இயக்கத்தில் ஒரு ஆக்‌ஷன் திரைப்படம் உருவாகிவருகிறது. இதில் சுந்தர்.சிக்கு வில்லனாக பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் நடிப்பது உறுதியாகியுள்ளது. இவர் ஏற்கனவே இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

4. ஜீ5 தளத்தில் வெளியான ‘ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்’...

மார்வெல் ஸ்டூடியோ வெளியிட்ட கடைசி ஸ்பைடர் மேன் திரைப்படமான ‘நோ வே ஹோம்’ உலகளவில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்திருந்தது. இந்த படத்தின் டிஜிட்டல் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில் ஜீ5 தளத்தில் பே-ப்ரிவ்யு முறையில் இந்த படம் வெளியாகியுள்ளது.

5. ‘விஜய் 67’ படத்தை அட்லி இயக்குகிறாரா..?

விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகி நல்ல வசூல் பார்த்து வரும் நிலையில் கலவையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இதனிடையே ‘விஜய் 66’ படத்திற்கான வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து ‘விஜய் 67’ படத்தை அட்லி இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories