சினிமா

வலிமை போல் இல்லாமல் இப்போதே அப்டேட் கொடுத்த படக்குழு.. இன்று முதல் தொடங்குகிறது அஜித் 61!

வலிமை போல் இல்லாமல் இப்போதே அப்டேட் கொடுத்த படக்குழு.. இன்று முதல் தொடங்குகிறது அஜித் 61!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நேர்கொண்ட பார்வை, வலிமைக்கு பிறகு அஜித்தின் 61வது படத்துக்காக அதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

வலிமை ரிலீஸான கையோடு அஜித் 61 குறித்த அறிவிப்பையும் தயாரிப்பாளர் போனிகபூர் மாறுபட்ட வேடத்தில் இருக்கும் அஜித்தின் புகைப்படத்தோடு பகிர்ந்திருந்தார்.

அதன் பிறகு அதே லுக்கில் இருக்கும் அஜித்குமாரின் படங்களும் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகின.

இந்த நிலையில், இன்று முதல் அஜித் 61 படத்தின் ஷூட்டிங் பணிகள் தொடங்கவிருக்கிறது. மேலும் படத்தில் பணியாற்றும் குழுவினர் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

அதன்படி ஹெச்.வினோத் இயக்கத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாக இருக்கும் அஜித் 61 படத்துக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார்.

இதனிடையே இந்த படத்தின் கதை வங்கி கொள்ளைகளை மையமாக கொண்டது என்றும் ஸ்டேண்ட் காட்சிகளுக்கு வலிமை படத்தை போல அதிக முக்கியதுவம் இல்லாமல் இரண்டு சண்டை காட்சிகள் மட்டுமே கொண்ட படமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விரைவில் படபிடிப்பு முடிக்கப்பட்டு இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அஜித்தின் விஸ்வாசம், வலிமை போன்ற படங்கள் குறித்த அப்டேட்கள் தாமதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவருடைய அடுத்த படத்துக்கான அப்டேட்கள் அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories