சினிமா

புற்றுநோயால் இறந்த மகன்: சோகத்திலிருந்த பிரபல குணச்சித்திர நடிகர் திடீர் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல குணச்சித்திர நடிகரும், திரைக்கதை ஆசிரியருமான ஷிவ்குமார் சுப்பிரமணியத்தின் திடீர் மறைவால் பாலிவுட்டில் அதிர்ச்சி.

புற்றுநோயால் இறந்த மகன்: சோகத்திலிருந்த பிரபல குணச்சித்திர நடிகர் திடீர் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆலியா பட் நடிப்பில் வெளியான 2 ஸ்டேட்ஸ் படத்தில் அவருக்கு தந்தையாக நடித்திருந்திருப்பார் ஷிவ் குமார் சுப்பிரமணியம். அதேபோல, tu hai mera sunday, Hichki, Nail Polish, Rocky Handsome உள்ளிட்ட ஏராளமான படங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், நேற்று (ஏப்.,10) ஞாயிறன்று மும்பையில் உடல்நலக் குறைவால் நடிகர் ஷிவ் குமார் சுப்பிரமணியம் உயிரிழந்தார் என்ற செய்தி பாலிவுட் பிரபலங்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

புற்றுநோயால் இறந்த மகன்: சோகத்திலிருந்த பிரபல குணச்சித்திர நடிகர் திடீர் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம்!

இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஷிவ் குமாரின் மகன் ஜஹன் மூளை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். அதில் இருந்தே மீண்டு வராத ஷிவ் குமார் குடும்பத்தினருக்கு அவரது மறைவு பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனையடுத்து ஷிவ் குமாரின் மறைவுக்கு பிரபல இயக்குநர்களான அனுராக் காஷ்யப், ஹன்சல் மேத்தா என பலரும் ஷிவ் குமாருடனான நினைவலைகளை பகிர்ந்து தத்தம் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஷிவ் குமாரின் இறுதிச் சடங்குகள் மும்பையில் உள்ள அந்தேரியில் நடப்பதாக ஹன்சல் மேத்தா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, ஷிவ் குமார் கடைசியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான மீனாக்ஷி சுந்தரேஷ்வர் படத்தில் சந்தியா மல்ஹோத்ராவுக்கு அப்பாவாக நடித்திருந்தார்.

இதனிடையே பல படங்களில் உதவி இயக்குநராக இருந்த ஷிவ் குமார், Parinda, 1942: A love story and Hazaro Khawishein Aisi போன்ற படங்களின் திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் ஷிவ் குமார் வென்றிருக்கிறார்.

banner

Related Stories

Related Stories