சினிமா

தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகும் 'குற்றம் குற்றமே' படம்.. இரட்டை வேடத்தில் விஷால்! #CINEMAUPDATES

ஜெய் நடிக்கும் குற்றம் குற்றமே படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகும் 'குற்றம் குற்றமே' படம்..  இரட்டை வேடத்தில் விஷால்! #CINEMAUPDATES
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வின் டீசலுடன் இணைந்த கேப்டன் மார்வெல்!

ஹாலிவுட் சினிமா பிரியர்களின் பெரும் ஆதரவை பெற்ற மிகப்பெரிய திரைப்பட வரிசைகளில் ஒன்று ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ். இதுவரை 9 பாகங்கள் வெளியாகியுள்ள இந்த கடைசி பாகமான ‘ஃபாஸ்ட் 10’ தற்போது உருவாகிவருகிறது. வின் டீசல் லீட் ரோலில் நடித்துவரும் இந்த படத்தில் அவரின் கூட்டளிகள் அனைவரும் நடிக்க புதியதாக கேப்டன் மார்வெல் படத்தில் நடித்த பேரி லார்சன் இணைந்துள்ளார்.

தன் மகளின் நடன வீடியோவை பகிர்ந்த மகேஷ்பாபு!

தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் அடுத்து சர்காரு வாரி பட்டா படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்து வைத்திருக்கும் நிலையில் சமீபத்தில் ‘பென்னி’ எனும் சிங்கிள் வெளியிடப்பட்டது. அதில் மகேஷ் பாபுவின் மகளும் நடனமாடிருந்தார். இதனை தொடர்ந்து அவரின் சினிமா எண்ட்ரி குறித்து பரவலாக பேசப்பட்ட நிலையில் தன் மகளின் குச்சிப்புடி நடன வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெய்யின் குற்றம் குற்றமே படத்தின் ட்ரைலர்!

சுசிந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குற்றம் குற்றமே’. வரும் 14ஆம் தேதி நேரடியாக கலைஞர் தொலைக்காட்சியில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் ட்ரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. சுசிந்தரனின் வழக்கமான படமாக இல்லாமல் புதியதொரு பாணியில் நல்ல ஆக்‌ஷன் திரைப்படமாக இது இருக்கும் என்பதை ட்ரைலர் உறுதிப்படுத்தியுள்ளது.

இரட்டை வேடத்தில் நடிக்கும் விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. வரலாற்று திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் இரண்டு வெவ்வேறு காலக்கட்டங்களை காட்சிப்படுத்த இருப்பதாகவும் இதனால படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகிய இருவருக்கும் இரட்டை வேடங்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கான ப்ரோடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பெங்களூர் அணியுடன் கூட்டணி அமைத்த ‘கே.ஜி.எஃப் 2’ படக்குழு!

கன்னட சினிமாவின் பிரம்மாண்ட படைப்பாக வெளியாகவுள்ளது யஷ் நடிப்பில் உருவாகிருக்கும் ‘கே.ஜி.எஃப் 2’. இதன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் வரும் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஹோம்லே ஃபிலிம்ஸ் ஐ.பி.எல் அணிகளில் ஒன்றான பெங்களூரு அணியுடன் கூட்டணி அமைத்துள்ளனர். இதனால் படத்தின் ப்ரோமோஷன் உலகளவில் எளிதாக நடந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories