சினிமா

வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட விஜய்யின் ‘பீஸ்ட்’... காரணம் என்ன தெரியுமா? | #5in1_Cinema

பீஸ்ட் படத்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் கத்தார் மற்றும் குவைத் ஆகிய இடங்களில் வெளியிட தடை விதித்துள்ளனர்.

வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட விஜய்யின் ‘பீஸ்ட்’... காரணம் என்ன தெரியுமா? | #5in1_Cinema
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1. வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட விஜய்யின் ‘பீஸ்ட்’..!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். வரும் 13ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்த படத்தை உலகளவில் மிக பிரம்மாண்டமாக வெளியிடுகிறது சன் பிக்சர்ஸ். இந்நிலையில் பீஸ்ட் படத்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் கத்தார் மற்றும் குவைத் ஆகிய இடங்களில் வெளியிட தடை விதித்துள்ளனர்.

தீவிரவாதம் கதைக்களமாக இருப்பதால் இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’ படமும் தீவிரவாதம் கதைக்களமாக இருந்த காரணத்தால் இங்கு தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2. மாரி செல்வராஜின் 'மாமன்னன்'.. இதுதான் வடிவேல் கேரக்டரா?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். கடந்த மார்ச் மாதன் 4ஆம் தேதி துவங்கிய இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுப்பெற்று அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கு படக்குழு தயாராகி வரும் நிலையில் படத்தில் வடிவேலுவின் கேரக்டர் அரசியல்வாதி என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயரும் மாமன்னன் என கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட விஜய்யின் ‘பீஸ்ட்’... காரணம் என்ன தெரியுமா? | #5in1_Cinema

3. செல்வராகவன் படத்தில் இணைந்த நட்டி!

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின் மூலம் கவனமீர்த்த இயக்குனர் மோகன்.G அடுத்ததாக இயக்குனர் செல்வராகவனை கதாநாயகனாக வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். தற்போது இந்த படத்தில் நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி இணைந்துள்ளார். மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. படப்பிடிப்பை இம்மாதம் இறுதியில் துவங்க திட்டமிட்டுள்ளார்.

4. சிவகார்த்திகேயன் வெளியிட்ட பிரசன்னாவின் ‘ஃபிங்கர்டிப் 2’ ட்ரெய்லர்!

ஜீ5 ஒரிஜினலாக வெளியாகி வரவேற்பை பெற்ற தொடர் ‘ஃபிங்கர்டிப்’. அக்‌ஷரா ஹாசன், அஷ்வின், சுனைனா, காயத்ரி ஆகியோர் நடித்திருந்த இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது இரண்டாம் சீசன் பிரசன்னா, ரெஜினா கசண்ட்ரா, அபர்னா பாலமுரளி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது. இதன் ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

5. 25 ஆண்டுகள் கடந்த ரஜினியின் ‘அருணாச்சலம்’!

சுந்தர்.சி இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகிருந்த படம் தான் ‘அருணாச்சலம்’. ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்பா, கவுண்டர்மணி, செந்தில் என பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருந்த இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கோடிக்கணக்கில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலும் இருந்தது.

வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட விஜய்யின் ‘பீஸ்ட்’... காரணம் என்ன தெரியுமா? | #5in1_Cinema

ரஜினிக்கு உரிய ஸ்டைல் மற்றும் மாஸ் பஞ்ச் வசனங்கள் அனைத்தும் பெற்ற நல்ல கமர்ஷியல் படமான இது வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனால் ட்விட்டரில் #25 இயர்ஸ் ஆஃப் அருணாச்சலம் ட்ரெண்டாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories