தமிழ்நாடு

28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!

தருமபுரியில் ரூ.15.39 கோடி மதிப்பில் முடிவுற்ற 33 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 421 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 28,639 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் துணை முதலமைச்சர்.

28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (13.3.2026) தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தருமபுரி மாவட்டத்தில் 15.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 33 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 33.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 421 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 28,639 பயனாளிகளுக்கு 254.59 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, பழங்குடியினர் நலத்துறை, பொது நூலகத்துறை ஆகிய துறைகளின் மூலம் 15.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட 33 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொதுப்பணித்துறை ஆகிய துறைகளின் மூலம் 33.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 421 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 4,195 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகள்,

வருவாய்த் துறையின் சார்பில் 1,328 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 69 பயனாளிகளுக்கு நிவாரண உதவித் தொகை, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள்,

28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், 40 பயனாளிகளுக்கு தேய்ப்பு பெட்டிகள், கூட்டுறவுத் துறையின் சார்பில் 630 பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்பு கடன், பயிர்கடன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு கடனுதவிகள்,

மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 9,297 மகளிருக்கு வங்கிக் கடன் இணைப்புகள், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 20 விவசாயிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைத்தல், முதலமைச்சரின் சூரிய சக்தியில் இயங்கும் மின் மோட்டார் பம்பு செட் அமைத்தல் உள்ளிட்ட இயந்திரமயமாக்கல் நலத்திட்ட உதவிகள், வனத்துறையின் சார்பில் 24 பயனாளிகளுக்கு சுழல் நிதி கடனுதவிகள்,

28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 40 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் 200 மீனவர்களுக்கு மீனவர் நலவாரிய அடையாள அட்டைகள், தாட்கோ திட்டத்தின் சார்பில் 20 பயனாளிகளுக்கு பழங்குடியினர் துரித மின் இணைப்புகள், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் சார்பில் 200 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகள்,

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்ட மானிய உதவிகள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் 500 தொழிலாளர்களுக்கு புதிய பதிவு அட்டைகள்,

வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 706 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், வேளாண்மைத்துறையின் சார்பில் 26 பயனாளிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதற்கான உதவிகள், பால்வளத்துறையின் சார்பில் 11,187 பயனாளிகளுக்கு கூடுதல் ஊக்கத் தொகை காசோலைகள், சமூக நலத்துறையின் சார்பில் 75 பெண்குழந்தைகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வைப்புத் தொகை ஆணைகள்,

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் சார்பில் 11 பயனாளிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்ட மாதிரி வயல்கள் அமைக்க உதவிகள், முன்னோடி வங்கியின் சார்பில் 10 மாணவர்களுக்கு கல்விக் கடனுதவிகள், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 50 பயனாளிகளுக்கு நுண்ணீர் பாசனம் அமைப்பதற்காக உதவிகள் என மொத்தம் 28,639 பயனாளிகளுக்கு 254.59 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

banner

Related Stories

Related Stories