தமிழ்நாடு

முதல்வர் விஜய் வழங்கிய பணி ஆணை... தரவரிசையைப் பின்பற்றாத அதிகாரிகள் : TNPSC கலந்தாய்வில் முறைகேடா?

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு முன்னுரிமை வழங்காமல், மாற்று நபர்களுக்கு முன்னுரிமை அளித்திருப்பதாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

முதல்வர் விஜய் வழங்கிய பணி ஆணை... தரவரிசையைப் பின்பற்றாத அதிகாரிகள் : TNPSC கலந்தாய்வில் முறைகேடா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த 2025ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இளநிலைப் பயிற்சி அலுவலர் பணிக்கான 740-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.

அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டு, கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பிரிவு வாரியாகக் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. தேர்வர்களுக்கான தொழிற்பயிற்சி நிலைய ஒதுக்கீட்டுக் கலந்தாய்வு கடந்த 28 மற்றும் 29ஆம் தேதிகளில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோயம்புத்தூர், சேலம், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட ஏழு இடங்களில் நடைபெற்றது.

ஆனால், அதற்கு முன்னதாகவே 28ஆம் தேதி காலை தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் 673 இளநிலைப் பயிற்சி அலுவலர்களுக்குப் பணி ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. அதன் பின்னரே கலந்தாய்வு நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வில் தேர்வர்களின் மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப்படி அழைக்கப்படாமல், முன்னும் பின்னுமாக மாற்றி மாற்றி அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முதல்வர் விஜய் வழங்கிய பணி ஆணை... தரவரிசையைப் பின்பற்றாத அதிகாரிகள் : TNPSC கலந்தாய்வில் முறைகேடா?

இதனால், தரவரிசையில் முன்னிலையில் இருந்தவர்களைக் காட்டிலும் பின்தங்கியவர்கள் தங்களுக்கான இடங்களைத் தேர்வு செய்த பின்னர், எஞ்சிய இடங்களையே முன்னிலையில் இருந்தவர்கள் தேர்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதுகுறித்து அங்கேயே தேர்வர்கள் கேள்வி எழுப்பியபோதும், அதற்குப் பதிலளிக்க அதிகாரிகள் மறுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், "வேண்டுமென்றால் இருக்கும் இடத்தை எடுத்துக் கொள்ளலாம்; இல்லையென்றால் இடத்தைவிட்டு கிளம்புங்கள்" என்ற ரீதியில் அதிகாரிகள் பதிலளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேரடி கலந்தாய்வில் மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசையைப் பின்பற்றாமல் இடங்களைத் தேர்வு செய்ய அனுமதித்தது, தேர்வு நடைமுறையில் ஏதேனும் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்ற சந்தேகத்தைத் தேர்வர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

banner

Related Stories

Related Stories