சினிமா

5in1_Cinema | விக்ரமையும் விட்டு வைக்காத ஏ.ஆர்.முருகதாஸ்.. தெலுங்கும் பாடும் சிம்பு..!

5in1_Cinema | விக்ரமையும் விட்டு வைக்காத ஏ.ஆர்.முருகதாஸ்.. தெலுங்கும் பாடும் சிம்பு..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. 'Oh my dog' படத்தின் டீஸர் வெளியானது...

நடிகர் அருண் விஜய் நடிப்பில் அடுத்து ரிலீஸுக்கு தயாராகிருக்கும் திரைப்படம் 'ஓ மை டாக்'. இந்த திரைப்படத்தை ஷரோவ் சண்முகம் என்பவர் இயக்கியுள்ளார். அருண் விஜய், விஜயகுமார் மற்றும் அவரது மகன் அர்னவ் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர் நடித்துள்ளனர்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் 29ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

2. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் “பேப்பர் ராக்கெட்”..!

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், 'பேப்பர் ராக்கெட்' எனும் வெப் சீரிஸ் உருவாகிவருகிறது. காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இந்த தொடர் ஜீ5 ஒரிஜினலாக உருவாகிவருகிறது. இந்தத் தொடரில் தரன் குமார், சைமன் K கிங் மற்றும் வேத்சங்கர் என மூன்று இசையமைப்பளர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.

3. கன்னியாகுமரியில் ‘சூர்யா 41’ படப்பிடிப்பு...

நந்தா, பிதாமகன் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் பாலா மற்றும் சூர்யா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர். தற்காலிகமாக ‘சூர்யா 41’ அழைக்கப்படும் இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி மற்றும் மமிதா பைஜூ நாயகிகளாக நடிக்கின்றனர். தற்போது இந்த படத்திற்கான ஷூட்டிங் கன்னியாகுமரியில் துவங்கியுள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

4. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விக்ரம்...

நடிகர் விக்ரமிற்கு தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன், துருவநட்சத்திரம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகிவருகிறது. இதுதவிர பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவும் விக்ரம் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படங்களை தொடர்ந்து இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

5. லிங்குசாமியின் தெலுங்கு படத்தில் நடிகர் சிம்பு...

லிங்குசாமி இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் படம் ‘தி வாரியர்’. ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகிவரும் இந்த படம் ஜூலை 14ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலுமே சிம்புவே பாடியுள்ளாராம்.

banner

Related Stories

Related Stories