சினிமா

பாட்டு பாட வந்த ஆண்ட்ரியாவை ஆட்டம் போடச் சொன்னதால் கோபம்.. கோவில் திருவிழாவில் ரசிகர்கள் ரகளை!

கோவில் திருவிழாவில் நடனமாடச் சொல்லி ரகளை செய்த ரசிகர்களால் கோபப்பட்டு போன நடிகை ஆண்ட்ரியா.

பாட்டு பாட வந்த ஆண்ட்ரியாவை ஆட்டம் போடச் சொன்னதால் கோபம்.. கோவில் திருவிழாவில் ரசிகர்கள் ரகளை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லூர் வேங்காம்பட்டி கோவில் திருவிழாவின் இறுதி நாளன்று திரையிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில் தமிழ் சினிமாவின் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா பங்கேற்றிருந்தார். அப்போது அவரை காண்பதற்காக ரசிகர்கள் கூட்டம் திருவிழாவுக்கு படையெடுத்து ஆண்ட்ரியாவுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

பாட்டு பாட வந்த ஆண்ட்ரியாவை ஆட்டம் போடச் சொன்னதால் கோபம்.. கோவில் திருவிழாவில் ரசிகர்கள் ரகளை!

விழா மேடைக்கு போகும் முன்பே ரசிகர்கள் பட்டாளம் ஆண்ட்ரியாவை சூழ்ந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் மேடையேறிய ஆண்ட்ரியாவை நோக்கி விசிலடித்து ஆரவாரம் செய்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

பின்னர் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா உட்பட சில சினிமா பாடல்களை பாடிய ஆண்ட்ரியாவிடம் நடனமாடச் சொல்லி ரசிகர்கள் சிலர் வற்புறுத்தியிருக்கிறார்கள்.

இதனால் ஆண்ட்ரியா கோபமடைந்தார். பின்னர் ஒரேயொரு பாடலை பாடிவிட்டு விழாவில் இருந்து அவர் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்கள். இதனிடையே ரசிகர்களின் ரகளை அதிகமானதால் அவர்களை கட்டுப்படுத்த போலிஸார் இறங்கி அவர்களை எச்சரித்து அப்புறப்படுத்தினர்.

banner

Related Stories

Related Stories