உலகம்

Breaking Bad தொடரின் நடிகர் திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி - இரங்கல் தெரிவித்து வரும் சினிமா உலகம்!

Breaking Bad தொடரில் நடித்த மார்க் மார்கோலிஸ் உடல்நலக்குறைவால் காலமானார். இவருக்கு வயது 83

Breaking Bad தொடரின் நடிகர் திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி - இரங்கல் தெரிவித்து வரும் சினிமா உலகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவிட் காலத்தில் மக்கள் வீட்டில் முடங்கிய பிறகுதான் ஓடிடி தளப் பயன்பாடு அதிகரித்தது. செல்பேசிகளிலேயே படங்களும் தொடர்களும் பார்க்கும் வழக்கம் அறிமுகமானது.

அப்படி தமிழ்ச்சூழலின் ஆரம்பக் கட்ட ஓடிடி தொடர்களாக House of cards, Money Heist, Game of thrones போன்றவை ஹிட் அடித்தன. அந்த வரிசையில் இடம்பெற்ற தொடர்தான் Breaking Bad. மொத்தமாக ஐந்து சீசன்கள் இருக்கின்றன. 62 எபிசோடுகள். வால்டர் ஒயிட் என்கிற ஒரு சாதாரண வேதியியல் பேராசிரியர் ஒரு பெரும் போதை மருந்து வணிகத்தின் பங்காளராக மாறுவதே இத்தொடரின் அடிப்படைக் கதை. இந்த தொடர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மார்க் மார்கோலிஸ். வால்டர் ஒயிட்டை மிரட்டும் இரண்டு நபர்களின் தந்தையாக சலமான் கதாபாத்திரத்தில் நடித்தார். அதோடு சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே நடித்த இவரது முதிர்ச்சியான நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. கதையின் திருப்பு முனையாகவும் இவர்தான் இருப்பார்.

Breaking Bad தொடரின் நடிகர் திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி - இரங்கல் தெரிவித்து வரும் சினிமா உலகம்!

இவர் "ஸ்கார்ஃபேஸ்," "ஏஸ் வென்ச்சுரா: பெட் டிடெக்டிவ்" "பிளாக் ஸ்வான்", "ஓஸ்" போன்ற பல படங்களில் நடித்திருந்தாலும் Breaking Bad தொடர்தான் இவரை உலகம் முழுவதும் கொண்டு சென்றது.

இந்நிலையில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மார்க் மார்கோலிஸ் உயிரிழந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு சக நடிகர்கள் முதல் Breaking Bad ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories