உலகம்

முதியவரை கொன்ற முதலைகள் கூட்டம்.. கீழே விழுந்தவருக்கு நேர்ந்த சோகம்.. கம்போடியாவில் அதிர்ச்சி !

முதியவர் ஒருவரை முதலை கூட்டம் கொடூரமாக கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதியவரை கொன்ற முதலைகள் கூட்டம்.. கீழே விழுந்தவருக்கு நேர்ந்த சோகம்.. கம்போடியாவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் முதலைகளை வளர்ப்பது வெகுசாதாரணமாக இருந்து வருகிறது. முதலையின் முட்டை, இறைச்சி போன்றவற்றுக்காக அங்கு பலர் பண்ணைகளில் முதலைகளை வளர்த்து வருகின்றனர்.

அந்த வகையில், சியாம் ரிப்பில் என்ற 72 வயது முதியவர் ஒருவர் தனக்கு சொந்தமான இடத்தில் ஏராளமான முதலைகளைக் கொண்டு முதலைப் பண்ணை ஒன்றை நடத்திவந்துள்ளார். அந்த பண்ணையில் இருந்த முதலை ஒன்று அண்மையில் முட்டைகளை ஈன்றியுள்ளது.

முதியவரை கொன்ற முதலைகள் கூட்டம்.. கீழே விழுந்தவருக்கு நேர்ந்த சோகம்.. கம்போடியாவில் அதிர்ச்சி !

அதனை எடுப்பதற்காக தாய் முதலையை அந்த இடத்தில் இருந்து அகற்றி முட்டைகளைச் சேகரிக்க அந்த இடத்துக்கு முதியவர் சென்றுள்ளார். அதன்படி தாய் முதலையை அங்கிருந்து விரட்ட ஒரு கம்பு ஒன்றை எடுத்துக்கொண்டு அவர் சென்றபோது எதிர்பாராத விதமாக முதலைகள் அதிகம் இருந்த இடத்தில் விழுந்துள்ளார்.

உடனே அவரை இறை என நினைத்த சுமார் 40 முதலைகள் முதியவரை தாக்கத்தொடங்கியுள்ளது. இதில் அவர் கூச்சலிட்டுள்ளார். ஆனால், உடனடியாக உதவிக்கு யாரும் வராத நிலையில், அந்த முதலைகள் அவரின் கொன்று உடலின் சில பாகங்களை உணவாக உட்கொண்டதாக கூறப்படுகிறது.

முதியவரை கொன்ற முதலைகள் கூட்டம்.. கீழே விழுந்தவருக்கு நேர்ந்த சோகம்.. கம்போடியாவில் அதிர்ச்சி !

அதன்பின் அவரை காணாமல் அங்குவந்த உறவினர்கள் அவரின் சடலத்தை கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி அங்கு வந்த காவல்துறையினர் அவரின் சடலத்தை மீது மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் கம்போடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories