உலகம்

"நான் ஏமாற்றுவதைபோல உணருகிறேன்" - 312 கோடி சம்பாதிக்கும் யூடியூபர் ஆவேசம் !

நான் நேர்மையற்ற முறையில் இந்த தொகையை சம்பாதிக்கிறேன், அது நியாயமற்றதாக உணர்கிறேன் என பிரபல யூடியூபர் ஒருவர் கூறியுள்ளார்.

"நான் ஏமாற்றுவதைபோல உணருகிறேன்" - 312 கோடி சம்பாதிக்கும் யூடியூபர் ஆவேசம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆன்லைன் விளையாட்டுகளை யூடியூபில் பதிவிட்டு அதன்மூலம் வருமானம் ஈடுபவர்களில் ஒருவர் மார்கிப்ளியர். அமெரிக்காவை சேர்ந்த இவர், யூடியூப் மூலம் கோடிக்கணக்கான டாலர்களை சம்பாதிக்கின்றனர். அமெரிக்காவின் அதிக வருமானம் ஈட்டும் முதல் 100 சேனல்களில் இவர் சேனலும் ஒன்று.

இவரது யூடியூப் சேனலை சுமார் 3 கோடி பேர் பின்தொடருகிறார்கள். இதன்மூலம் இவர் இந்திய மதிப்பில் சுமார் 312 கோடி சம்பாதித்து வருகிறார். இந்த நிலையில், இவர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

"நான் ஏமாற்றுவதைபோல உணருகிறேன்" - 312 கோடி சம்பாதிக்கும் யூடியூபர் ஆவேசம் !

தனது வருமானம் குறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், "நான் நேர்மையற்ற முறையில் இந்த தொகையை சம்பாதிக்கிறேன், அது நியாயமற்றதாக உணர்கிறேன். நான் இதைப் பற்றி பேசத் தயாராக இருக்கிறேன், ஏனென்றால் இவ்வளவு வெற்றியைப் பெறுவது ஏமாற்றுவது போல் தெரிகிறது. நான் ஒரு விஷத்தை உருவாக்க விரும்புகிறேன். அடுத்தவருக்கு ஒரு ஊக்குசக்தியாக இருக்க விரும்புகிறேன்.

இது ஒரு முட்டாள்தனம். நான் செய்ய விரும்புவதை என்னால் செய்ய முடியும். நான் விரும்பியதை எப்போது வேண்டுமானாலும் என்னால் செய்ய முடியும். அடுத்ததாக தேவைப்படும் நபர்களுக்கு உதவி செய்ய முயற்சிப்பேன். என் நண்பர்களோடு சேர்ந்து அதற்காக முதலீடு செய்து அவர்கள் வெற்றிபெற உதவுவேன்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories