இந்தியா

கணவரை கொலை செய்து விட்டு கணவர் நீண்ட நாள் வாழ விரதம் மேற்கொண்ட பெண்கள்.. உ.பி சிறையில் நடந்த விசித்திரம்

கணவரை கொலை செய்த குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு பெண்கள் கணவர் நீடித்த ஆயுளுக்காகவும் நடத்தப்படும் விரதத்தை மேற்கொண்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவரை கொலை செய்து விட்டு கணவர் நீண்ட நாள் வாழ விரதம் மேற்கொண்ட பெண்கள்.. உ.பி சிறையில் நடந்த விசித்திரம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்வா சவுத் என்ற விரதம் திருமணமான பெண்களால் தங்கள் கணவரின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும், நீடித்த ஆயுளுக்காகவும் நடத்தப்படுவதாகும். வடஇந்தியாவில் இந்த பூஜை முக்கியமானதாக கருதப்படும். சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில், சிறையில் இருக்கும் திருமணமான பெண்களுக்கு இந்த விரதத்தை கடைபிடிக்கவும் அனைத்து பூஜை முறைகளையும் சிறைக்குள்ளேயே செய்வதற்கும் அனுமதி கோரப்பட்டது.

அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் சிறைசாலை துறை அமைச்சர் தரம்வீர் பிரஜபதி இந்த உத்தரவை வழங்கி உத்தரவிடப்பட்டது. அதன்படி இந்த விரதத்தின் போது சிறைக் கைதிகள் தங்களுடைய குடும்பத்தினரை சந்திக்கவும் அவர்களிடமிருந்து பூஜை பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கணவரை கொலை செய்து விட்டு கணவர் நீண்ட நாள் வாழ விரதம் மேற்கொண்ட பெண்கள்.. உ.பி சிறையில் நடந்த விசித்திரம்

அதன்படி சிறையில் இருக்கும் பெண்கள் இந்த விரதத்தை பின்பற்றி பூஜை செய்து வந்தனர். இந்த நிலையில், இந்த நிலையில், கோரக்பூர் எனும் இடத்தில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் இருக்கும் இரு பெண்கள் கர்வா சவுத் விரதத்தை மேற்கொண்டது இணையத்தில் வைரலாகியுள்ளார்.

கோரக்பூர் சிறையில் 12 பேர் இந்த விரதம் மேற்கொள்ள அனுமதி கேட்டு அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதில், கணவரை கொலை செய்த குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு பெண்கள் கணவர் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும், நீடித்த ஆயுளுக்காகவும் நடத்தப்படும் இந்த கர்வா சவுத் விரதத்தை மேற்கொண்டனர். இந்த நிகழ்வை பலர் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories