அரசியல்

இந்தியை திணிக்க நினைக்கும் கும்பலுக்கு தமிழில் பேசி பாடமெடுத்த News Anchor- நேரலையில் சம்பவம் செய்த பெண்!

இந்தியாவின் முன்னணி ஆங்கில தொலைக்காட்சியான இந்தியா டுடேவில் செய்தியாளராக பணியாற்றும் அக்‌ஷிதா நந்தகோபால் என்ற நெறியாளர் இந்தி திணிப்பு குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்தியை திணிக்க நினைக்கும் கும்பலுக்கு தமிழில் பேசி பாடமெடுத்த News Anchor- நேரலையில் சம்பவம் செய்த பெண்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளை தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.

இது தவிர ஒன்றிய அரசின் அலுவலங்களில் இந்தியை பயன்படுத்த சொல்வது, அலுவல் பூர்வ கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

அதைத் தொடர்ந்து சமீபத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக ஹிந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

இந்தியை திணிக்க நினைக்கும் கும்பலுக்கு தமிழில் பேசி பாடமெடுத்த News Anchor- நேரலையில் சம்பவம் செய்த பெண்!

மேலும், கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக கட்டாயம் இந்தி இடம்பெறவேண்டும்.கல்லூரிகளில் ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை கொண்டு வர வேண்டும்.போட்டி தேர்வுகளில் கட்டாய ஆங்கில மொழி வினாத்தாள்கள் நிறுத்தப்பட வேண்டும். போட்டி தேர்வுகளில் இந்தியை கட்டாய மொழியாக்க வேண்டும்.இந்தியில் பணிபுரியாத அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எச்சரிக்கப்பட வேண்டும்.ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வில் தேர்வாளர்கள் இந்தி அறிவை உறுதி செய்ய வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி இருக்க வேண்டும். அரசியல் சாசன தேவை ஏற்பட்ட்டால் மட்டுமே ஆங்கில மொழி பெயர்ப்பை பயன்படுத்த வேண்டும். விளம்பரங்கள் அனைத்தும் இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் இடம்பெற வேண்டும். ஆங்கில விளம்பரங்கள் சிறியதாகத்தான் இருக்க வேண்டும். ஒன்றிய அரசின் அலுவலகங்கள் அனைத்திலும், அமைச்சரவை இலாகாக்கள் அனைத்திலும் கடிதங்கள், பேக்ஸ்கள், இ மெயில்கள் இந்தியில்தான் இருக்க வேண்டும். அலுவலக பயன்பாட்டுக்கு எளிதான இந்தி பயன்படுத்த வேண்டும். ஒன்றிய அரசால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள், உரைகள் அனைத்தும் இந்தியில் இருக்க வேண்டும் போன்ற பல்வேறு பரிந்துரைகளும் அதில் இடம்பெற்றுள்ளது.

இந்தியை திணிக்க நினைக்கும் கும்பலுக்கு தமிழில் பேசி பாடமெடுத்த News Anchor- நேரலையில் சம்பவம் செய்த பெண்!

ஒன்றிய அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசின் இந்த இந்தி திணிப்பை நிறுத்தவேண்டும் என அறிக்கை விட்டதோடு இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், இந்தியாவின் முன்னனி ஆங்கில தொலைக்காட்சியான இந்தியா டுடேவில் செய்தியாளராக பணியாற்றும் அக்‌ஷிதா நந்தகோபால் என்ற நெறியாளர் இந்தி திணிப்பு குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் "வணக்கம். நீங்கள் பார்க்கிறீர்கள் 6 PM பிரைம். நான் அக்‌ஷிதா நந்தகோபால். இன்னைக்கு நாம் விவாதிக்கப்போவது, இந்தி மொழி திணிப்பு." என தமிழில் பேசியுள்ளார். பின்னர் ஆங்கிலத்தில் பேசிய அவர், "நீங்கள் தமிழனாக இருந்து உங்களுக்கு தமிழ் மொழி புரிந்தால் நான் என்ன சொல்கிறேன் என்று முழுமையாக உங்களுக்கு புரியும். ஆனால், நீங்கள் தமிழனாக இல்லாவிட்டால் உங்களுக்கு நான் என்ன சொல்லி இருக்கிறேன் என்று புரியாது. இப்படி மொழியை உங்களிடம் திணித்தால் என்னவாகும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

தேர்வுகள், பயிற்று மொழி ஆகியவை தமிழில் இருந்தால் உங்களால் எப்படி சமாளிக்க முடியும். இதுதான் தற்போது தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இந்தி பேசப்படாத நிலையில் அங்கு இது திணிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தற்போது இதுவே விவாதப்பொருளாகி இருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" எனக் கூறினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories