உலகம்

“காதலியை திருமணம் செய்த இளைஞர்.. அடுத்த நாளே கொட்டிய பண மழை” : மகிழ்ச்சியில் தம்பதி!

இளைஞர் ஒருவர் திருமணம் செய்த அடுத்த நாளே அவருக்கு 10 மில்லியன் டாலர் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

 “காதலியை திருமணம் செய்த இளைஞர்.. அடுத்த நாளே கொட்டிய பண மழை” : மகிழ்ச்சியில் தம்பதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 26 வயதான ரீஸ் என்ற இளைஞர் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் துபாய்க்கு குடிபெயர்ந்துள்ளார். அங்கு உடற்பயிற்சி கூடத்தில் வேலை செய்து வந்த இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 15ம் நாள் தனது காதலியை திருமணம் செய்துள்ளார். இதற்கு அடுத்த நாள் புகழ் பெற்ற துபாய் Mahzooz டிராவில் அவருக்கு 10 மில்லியன் டாலர் (கிட்டத்தப்பட்ட ரூ. 98 கோடி) பரிசு விழுந்துள்ளது.

 “காதலியை திருமணம் செய்த இளைஞர்.. அடுத்த நாளே கொட்டிய பண மழை” : மகிழ்ச்சியில் தம்பதி!

இது குறித்து வெற்றிபெற்ற ரீஸ் கூறுகையில், எனக்கு லாட்டரியில் இத்தனை கோடி பணம் விழுந்ததை என்னால் நம்பவே முடியவில்லை என்றும், இ-மெயிலில் அதை பார்த்ததும் உறைத்து போய் எனது மனைவியை கட்டிக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும், நாங்கள் தொடர்ந்து துபாயில் வசிப்போம் என்றும், இங்கும் இங்கிலாந்திலும் நிலம் வாங்க போகிறோம் என்றும் கூறியுள்ளார். மேலும் எனது மனைவிக்கு புதிய கார் ஒன்றை அன்பளிப்பாக வழங்குவேன் என்றும் கூறியுள்ளார்.

 “காதலியை திருமணம் செய்த இளைஞர்.. அடுத்த நாளே கொட்டிய பண மழை” : மகிழ்ச்சியில் தம்பதி!

துபாய் Mahzooz டிராவில் பரிசு வென்ற இளம் நபர் என்ற சாதனையையும் ரீஸ் பெற்றுள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் பரவிய நிலையில் பலரும் ரீஸ்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories