தமிழ்நாடு

"தமிழ்நாடு"-பல போராட்டங்கள், உயிர் இழப்புகளுக்கு பின்னர் கிடைத்த வெற்றி.. "தமிழ்நாடு நாள்" வரலாற்று கதை!

இன்று "தமிழ்நாடு நாள்" கொண்டாடப்படும் நிலையில், அது கடந்துவந்த பாதைகள் இத கட்டுரை விவரிக்கிறது.

"தமிழ்நாடு"-பல போராட்டங்கள், உயிர் இழப்புகளுக்கு பின்னர் கிடைத்த வெற்றி.. "தமிழ்நாடு நாள்" வரலாற்று கதை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் நிலையில், அதன் வரலாற்றை இளம்தலைமுறையினர் அறிந்துகொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. அனைத்தும் போராடியே பெறவேண்டிய இந்த சூழலில், பலகாலமாக நாம் பயன்படுத்தி வந்த தமிழ்நாடு என்ற பெயரை கூட நாம் பல போராட்டங்களையும்,உயிர்பலிகளையும் கடந்தே அடைந்துள்ளோம்.

சுதந்திரத்துக்கு முன்னர் 1938ம் ஆண்டில் இந்தி கட்டாயமாக திணிக்கப்பட்டபோது அதை எதிர்த்து தமிழகமே கொதித்தெழுந்தது. பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டது. மாணவர்கள் , பொதுமக்கள் என பலர் அன்னை தமிழ் மொழிக்காகவும், இந்தியை எதிர்த்தும் போராட்ட களத்தில் குதித்தனர்.

அப்போது நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் 'தமிழ்நாடு தமிழருக்கே' என பெரியார் முழங்கினார். தொடர் போராட்டங்களின் காரணமாக இந்தி திணிப்பு அப்போது கைவிடப்பட்டது.

"தமிழ்நாடு"-பல போராட்டங்கள், உயிர் இழப்புகளுக்கு பின்னர் கிடைத்த வெற்றி.. "தமிழ்நாடு நாள்" வரலாற்று கதை!

இதன் பின்னர் இந்திய சுதந்திரத்துக்கு பிறகு தென்மாநிலங்கள் 'மதராஸ் மாகாணம்' என்ற பெயரில் இறங்கின. இந்த சூழலில் 1956-ம் ஆண்டு நவம்பர் முதல் நாள் மொழி வாரி மாநிலங்கள் பிறந்தன. 'மதராஸ் மாகாணம்' பிரிக்கப்பட்டு மதராஸ் மாகாணம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா என பிரிக்கப்பட்டது.

அப்போதுகூட தமிழ்மக்கள் வசிக்கும் பகுதிகள் 'மதராஸ் மாகாணம்' என்ற பெயரிலே இயங்கின. இந்த பிரிவினைக்கு முன்பே 1956 ஜூலை 27ம் தேதி அன்று 12 கோரிக்கைகளை முன்வைத்து சங்கரலிங்கனார் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். அதில் மாநில பெயரை தமிழ்நாடு' எனப் பெயர்மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை முக்கியமான ஒன்று.

ஆனால், அவரின் கோரிக்கையை அப்போதைய மாநில அரசு ஏற்கவில்லை. அவரை சமாதானப்படுத்த அண்ணா, காமராசர், ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் முயன்ற நிலையில், அதை ஏற்காத சங்கரலிங்கனார் 75 நாள்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்தார். அவர் விருப்பப்படி சங்கரலிங்கனார் உடல் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சங்கரலிங்கனார் மரணம் தமிழகத்தை உலுக்கியது.

"தமிழ்நாடு"-பல போராட்டங்கள், உயிர் இழப்புகளுக்கு பின்னர் கிடைத்த வெற்றி.. "தமிழ்நாடு நாள்" வரலாற்று கதை!

இதன்பின்னர் அண்ணா தலைமையிலான தி.மு.க 1957ல் முதன்முறையாகச் சட்டமன்றத்தில் நுழைந்தபோது தமிழ்நாடு பெயர் மாற்றம் தொடர்பாக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது. ஆனால், இந்த தீர்மானம் சட்டமன்றத்தில் தோற்கடிக்கபட்டது.

பின்னர், 1961ல் சோஷலிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மீண்டும் தமிழ்நாடு பெயர்மாற்ற தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் முன்னெடுத்தார். "அரசின் கடிதப்போக்குவரத்தில் மட்டும் தமிழ்நாடு என்று குறிப்பிடலாம்" என்று மாநில அரசு சமாதானம் பேசிய நிலையில், தி.மு.க உள்ளிட்ட யாரும் அதை ஏற்கவில்லை. முழுமையான தமிழ்நாடு என்பதில் அனைவரும் உறுதியோடு இருந்தனர். இந்த தீர்மானமும் சட்டமன்றத்தில் தோற்கடிக்கபட்டது.

இதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் புபேஷ் குப்தா, தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கையை முன்வைத்து தனிநபர் மசோதாவைக் கொண்டுவந்தார். இதற்கு ஆதரவு தெரிவித்து ``வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்” என்ற தொல்காப்பிய வாசகத்தையும், ``இமிழ்கடல் வேலியை தமிழ்நாடாக்கின” என்ற சிலப்பதிகாரப் பாடலையும் சுட்டிக்காட்டி பேரறிஞர் அண்ணா மாநிலங்களவையில் முழங்கினார். ஆகினும் இந்த மசோதா தோல்வியடைந்தது.

"தமிழ்நாடு"-பல போராட்டங்கள், உயிர் இழப்புகளுக்கு பின்னர் கிடைத்த வெற்றி.. "தமிழ்நாடு நாள்" வரலாற்று கதை!

1963 ஜூலை 23ம் தேதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அரங்கண்ணல் சட்டமன்றத்தில் பெயர்மாற்றத்தை வலியுறுத்தி தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார். இந்த தீர்மானமும் தோல்வியை சந்தித்தது.

தோல்வியினால் எப்போது தி.மு.க துவண்டுள்ளது? இந்த தொடர் தோல்வியை வெற்றிகரமாக மாற்ற அதிகாரத்தை அடையவேண்டி கடுமையாக தி.மு.க தொண்டர்கள் உழைத்தனர். இதற்கு பலன் விரைவில் கிடைத்தது.

1967-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பேரறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க 138 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியைப் பிடித்தது. ஆட்சியைப் பிடித்ததும், 1967 ஜூலை 18ம் தேதி 'மதராஸ் ஸ்டேட்' என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என்று மாற்றும் தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

பல ஆண்டு கால போராட்டம் இறுதியில் பேரறிஞர் அண்ணா மூலம், , 1967 ஜூலை 18ம் தேதி வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்தே அந்த நாள் "தமிழ்நாடு நாளாக" கொண்டாடப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories