வைரல்

“உற்சாகமாக நடனமாடியபோது மயங்கி விழுந்து உயிரிழந்த இளம்பெண்” : திருமண நிகழ்ச்சியில் நடந்த சோகம்! (Video)

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

“உற்சாகமாக நடனமாடியபோது மயங்கி விழுந்து உயிரிழந்த இளம்பெண்” : திருமண நிகழ்ச்சியில் நடந்த சோகம்! (Video)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருமண வைபவம் ஒன்றிற்காக வந்திருந்த 23 வயது இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் உடுப்பியில் நடைபெற்றுள்ளது. கர்நாடகா மாநிலம் உடுப்பி அருகே ஹவாஞ்சே பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்னா லூயிஸ் (23). ஜோஸ்னா, உடுப்பி மாவட்டம் பிரம்மவர் தாலுக்கா, கோலலகிரி அருகே உள்ள ஹவாஞ்சே என்ற இடத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்து, இரவு 8.30 மணியளவில் மயங்கி விழுந்தார்.

அப்போது உடனடியாக அந்த இளம் பெண்ணை அவரது உறவினர்கள் மணிப்பால் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ஜோஸ்னா காலை உயிரிழந்தார். இது குறித்து பிரம்மாவர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போலிஸார் இதுதொடார்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஜோஸ்னாவுக்கு எந்த நோயும் இல்லை என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். சமீப நாட்களில், குறிப்பாக கொரோனாவுக்குப் பிறகு, ஆரோக்கியமானவர்கள் கூட திடீரென சரிந்து இறந்து போவதாக நாடு முழுவதும் தகவல்கள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

banner

Related Stories

Related Stories