வைரல்

பால் பாக்கெட்டுகளில் ‘தம்பி’ விளம்பரம்.. பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆவின் நிறுவனம்!

ஆவின் பால் பாக்கெட்டுகளி செஸ் ஒலிம்பியாட் இலச்சினையான தம்பி உருவ படம் மற்றும் செஸ் போர்டு படங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றது.

பால் பாக்கெட்டுகளில் ‘தம்பி’ விளம்பரம்.. பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆவின் நிறுவனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆவின் பால் பாக்கெட்டுகளில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் வகையில் ஒலிம்பியாட் இலச்சினையான தம்பி உருவ படம் மற்றும் செஸ் போர்டு படங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றது.

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை மறுதினம் மாமல்லபுரத்தில் துவங்குகிறது. இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் சர்வதேச அளவில் நடைபெறும் இந்த செஸ் போட்டியை விளம்பரப்படுத்தும் நோக்கில், தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பால் பாக்கெட்டுகளில் ‘தம்பி’ விளம்பரம்.. பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆவின் நிறுவனம்!

இதன் ஒரு பகுதியாக ஆவின் நிர்வாகத்தின் சார்பில் இன்று விநியோகிக்கப்பட்ட பால் பாக்கெட்டுகளில், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப் படுத்தும் நோக்கில், போட்டியின் இலச்சினையான தம்பி உருவ டமும் செஸ் போர்டு படங்களும் நம்ப செஸ் நம்ப பெருமை என்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு ஓட்டு நடைபெறும் இடமான மாமல்லபுரத்தின் கோபுரங்களும் அச்சடிக்கப்பட்டு உள்ளது.

பால் பாக்கெட்களில் இதுபோன்று செஸ் போட்டியை விளம்பரப்படுத்தும் நோக்கில் அச்சடிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த போட்டி குறித்த தகவலை வீட்டிற்கு வீடு கொண்டு சேர்க்கும் வகையில் ஆவின் நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories