வைரல்

America’s Got Talent வரை அதிரவைத்த ரஜினியின் ‘மரண மாஸ்’- நடனமாடிய மும்பை குழுவுக்கு குவியும் பாராட்டு

ரஜினியின் பேட்ட படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் பாடல் அமெரிக்கா வரை ஒலித்தது உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது.

America’s Got Talent வரை அதிரவைத்த ரஜினியின் ‘மரண மாஸ்’- நடனமாடிய மும்பை குழுவுக்கு குவியும் பாராட்டு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமெரிக்காவின் பிரபல நடன நிகழ்ச்சியான America's Got Talent-ல் பல நாடுகளைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் சாகச நடனமாடி அசத்துவர். அவற்றின் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

அந்த வகையில், மும்பையைச் சேர்ந்த V.Unbeatable என்ற நடனக் குழு ஒன்று, ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மரண மாஸ் பாடலுக்கு பட்டைய கிளப்பும் வகையில் நடனமாடியுள்ளனர்.

அனிருத் இசையில் உருவான இந்த பாடலுக்கு பலம் சேர்க்கும் வகையில் மும்பை நடனக் குழுவினரின் நடனம் தீனி போட்டுள்ளது என பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல், அமெரிக்காவின் நிகழ்ச்சியின் தமிழ் படத்தின் பாடலுக்கு நடனமாடியிருப்பது தமிழ் சினிமா ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. பேட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மரண மாஸ் பாடல் நடனம் குறித்த வீடியோவை பகிர்ந்து நடனக்குழுவுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளது.

அதுபோல பல சினிமா நட்சத்திரங்களும் இந்த வீடியோவை பகிர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும், மரண மாஸ் பாடல் சர்வதேச அளவில் பிரபலமடைந்ததை அடுத்து நெட்டிசன்கள் #MaranaMass என்ற ஹேஷ்டேக்கையும் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories