வைரல்

ஹிருத்திக் ரோஷனின் தீவிர ரசிகையாக இருந்ததால் மனைவியைக் கொன்ற கணவர் : நியூயார்க்கில் பரபரப்பு!

ஹிருத்திக் ரோஷனின் தீவிர ரசிகையாக இருந்ததால் காதல் மனைவியை கொன்று தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் கணவர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நியூயார்க் நகரின் குயின்ஸ் பகுதியில் வசித்து வந்த தம்பதி, இந்தியாவைச் சேர்ந்த தினேஷ்வர் புதிதத் மற்றும் டோனி தோஜாய். இவர்கள் இருவருக்கும் கடந்த ஜூலை மாதம் தான் திருமணம் நடந்துள்ளது.

நியூயார்க்கில் உள்ள பார் ஒன்றில் வேலை பார்த்தார் டோனி தோஜாய். அவர் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார். ஹிருத்திக்கின் எந்த படம் வந்தாலும் முதல் நாளிலேயே பார்த்துவிடுவார்.

வீட்டிலும் ஹிருத்திக் ரோஷனின் பாடல்களைக் கேட்பதையே வழக்கமாக கொண்டிருந்தர் டோனி தோஜாய். டோனி எப்போதும் ஹிருத்திக் படங்களை மட்டுமே பார்த்ததால் கடுப்பான தினேஷ்வர் அவரைக் கண்டித்துள்ளார். மேலும், ஹிருத்திக்கின் படத்தைப் பார்த்தால் கொன்றேவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

ஹிருத்திக் ரோஷனின் தீவிர ரசிகையாக இருந்ததால் மனைவியைக் கொன்ற கணவர் : நியூயார்க்கில் பரபரப்பு!

இதனால் இருவருக்கும் சமீபகாலமாக அதிகப்படியான சண்டைகள் ஏற்பட்டுள்ளன. இது போலிஸ் வரை சென்று வழக்காகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் பிறகு தினேஷ்வரும், டோனி தோஜாயும் தனித்தனியாக இருந்திருக்கிறார்கள்.

இந்நிலையில், மீண்டும் கணவருடன் வாழச் சென்ற டோனிக்கு காத்திருந்தது என்னவோ மரணம்தான். டோனிக்கும் தினேஷ்வருக்கும் மீண்டும் சண்டை முற்றியதால் ஆத்திரமடைந்த தினேஷ்வர், டோனி தோஜாயை கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.

இதனையடுத்து, டோனி தோஜாயை கொன்றுவிட்டதாக அவரது சகோதரிக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு அவர்கள் தங்கியிருந்த குடியிருப்புக்கு அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் தினேஷ்வர்.

ஹிருத்திக் ரோஷனின் தீவிர ரசிகையாக இருந்ததால் மனைவியைக் கொன்ற கணவர் : நியூயார்க்கில் பரபரப்பு!

இது தொடர்பாக டோனியின் நண்பர்களிடம் விசாரித்தபோது, டோனி தோஜாய்க்கு ஹிருத்திக்கை மிகவும் பிடிக்கும் என்பதால் அவர் மீது இருந்த பொறாமையால் டோனியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என தினேஷ்வர் நினைத்ததாலேயே இந்த விபரீதம் நிகழ்ந்தது எனக் கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories