தமிழ்நாடு

தமிழ்நாட்டில் கேள்விக்குறியாகியுள்ள பெண்கள் பாதுகாப்பு : ஸ்ரீவைகுண்டம் சம்பவத்திற்கு கனிமொழி MP கண்டனம்!

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது எனத் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கேள்விக்குறியாகியுள்ள பெண்கள் பாதுகாப்பு : ஸ்ரீவைகுண்டம் சம்பவத்திற்கு கனிமொழி MP கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சி அமைந்ததில் இருந்தே, கொலை- கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை பெண்கள் மீதான வன்முறைகள் குறித்து தினமும் வெளியாகும் செய்திகள், மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

ஆனால், சட்ட ஒழங்கை கட்டுப்படுத்த வேண்டிய முதலமைச்சர் விஜயோ வேடிக்கைப்பார்த்து கொண்டு இருக்கிறார். நேற்றுக்கூட திருச்சியில் நடந்த நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்வார் என்று பார்த்தால், இதற்கும் கடந்த ஆட்சியாளர்கள்தான் காரணம் என கூறி தமது பொறுப்பையே மறந்து பிரச்சாரத்தில் பேசுவது போல் பேசியுள்ளார்.

இந்நிலையில்தான், திருவைகுண்டம் அருகே த.வெ.க நிர்வாகிகள், தங்கள் கட்சியை சேர்ந்த பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. த.வெ.கவில் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லையா? என்ற கேள்வி எழுந்து வருகிறது.

இந்த கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி ”திருவைகுண்டம் அருகே பெண் ஒருவர், தவெக நிர்வாகிகள் இருவரால் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

பெண்கள் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ள இன்றைய சூழலில், தேர்தல் காலத்தைப் போல திமுகவின் மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, தாங்கள் தான் ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து 'பொறுப்புடன்' முதலமைச்சர் விஜய் அவர்கள் செயல்பட போவது எப்போது?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories