
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பேரம்பாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் நல்ல நிலையில் செயல்பாட்டில் இருந்து வந்த ஆரம்ப சுகாதார நிலையம் தற்போது எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் இயங்கி வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், நேற்று (ஜூலை 26) விபத்தில் சிக்கிய ஒருவரை பேரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். அப்போது, அங்கு அவசர சிக்கிச்சைக்கு நோயாளிகளைக் கொண்டு செல்லும் ஒரு ஸ்ட்ரெச்சர் கூட இல்லாமல் மரக்கட்டை பலகையின் மீது படுக்க வைத்து மருத்துவம் பார்த்த அவல நிலையில் தான் அந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
சாதரணமாக ஒரு மருத்துவப் பயனாளியை சிகிச்சைக்கு அழைத்து வரும்போது, அவரால் நடக்க முடியாத நிலை அல்லது அல்லது அவசர சிகிச்சையெனில் ஸ்ட்ரெச்சரில் வைத்து மருத்துவமனையின் உள்ளே அழைத்து செல்வது தான் வழக்கம். ஆனால், இங்கு நிலமையோ வேறாக உள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதியைக் கூட கண்காணிக்காமல் தவெக அரசின் மெத்தனப் போக்காக செயல்பட்டதால்தான் இந்தநிலை ஏற்பட்டுள்ளது என்பது தெரிகிறது. மருத்துவ துறையில் சிறந்து விளங்கிய தமிழ் நாட்டை தவெக அரசு பீகார் போன்ற வட மாநிலங்களாக மாற்றி வருவதாக சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டில் மருத்துவ சிகிச்சையின் தரமும், அரசு மருத்துவமனைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக எந்த அளவிற்கு பராமரிப்போடு இருந்தது என்பதை அண்டை மாநிலங்களும் பாராட்டிய நிகழ்வுகள் நடந்துள்ளது. ஆனால், தற்போது இந்த தவெக ஆட்சியில் நிலைமை தலைகீழாக உள்ளது. ரீல்ஸ் போடுவதில் கவனம் செலுத்துவதை விடுத்து, அமைச்சர்களும் ஆட்சியாளர்களும் மக்களுக்கான பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது.






