அரசியல்

‘ஊழலை ஒழிக்க வந்த உத்தமன்.. தவெக-வின் Party Fun மிரட்டல்கள்.. வைரலான வீடியோ.. தீவிர நடவடிக்கை தேவை!’

திருவைகுண்டம் கல்குவாரிக்கு சென்று அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்து நொறுக்கிய தவெக நிர்வாகி மீது க்ண் துடைப்புக்காக இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் திமுக ஐடி விங் தெரிவித்துள்ளது

‘ஊழலை ஒழிக்க வந்த உத்தமன்.. தவெக-வின் Party Fun மிரட்டல்கள்.. வைரலான வீடியோ.. தீவிர நடவடிக்கை தேவை!’
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

ஊழலை நான் தான் ஒழிப்பேன் என கங்கணம் கட்டித் திரிந்த முதலமைச்சர் விஜய், தற்போது அவரது கட்சியில் நடக்கும் ஊழல்களையும் Party Fund கலாச்சாரங்களையும் கண்டும் காணாமல் உள்ளது நகைப்பை ஏற்படுத்துகிறது.

திருவைகுண்டம் பகுதியில் கல்குவாரி உரிமையாளரை ஆயுதத்தைக் காட்டி மிரட்டி, Party Fund கேட்டுத் தாக்குதல் நடத்திய தவெக நிர்வாகியின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் சட்டம்-ஒழுங்கின் சீரழிவையே காட்டுகின்றன. அரசியல் பலத்தைக் காட்டி தவெகவிற்கு நிதி கேட்டு மிரட்டுவதை வழக்கமாகக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மக்களைக் காப்போம் என்று கூறிக்கொண்டு, அதிகாரத்தைப் பயன்படுத்தி Party Fund வசூலிப்பதும் வன்முறையில் ஈடுபடுவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தொழில் செய்ய வரும் நபர்களை அச்சுறுத்தி, நிறுவனப் பொருட்களை அடித்து நொறுக்கும் இத்தகைய குற்றவாளிகள் மீது காவல்துறையினர் எவ்வித தயவுமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீடியோ வெளியாகி வைரலானதால் பெயரளவுக்குக் கைது நடவடிக்கை எடுக்காமல், உண்மையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று கைது செய்துவிட்டு, நாளை உங்கள் கட்சி நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்வது போன்ற கண்துடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்கள்!

ஏற்கனவே, கோவில் சொத்தை ஆட்டையைப் போட்டு அப்பட்டமாக மாட்டிக்கொண்டாலும் தமிழ்நாடு முழுவதும் அரசு வழக்கறிஞர் நியமனத்தில் படுஜோராக ‘PARTY FUND’ வாங்கிக் கொண்டிருக்கிறது த.வெ.க அரசு.

‘ஊழலை ஒழிக்க வந்த உத்தமன்.. தவெக-வின் Party Fun மிரட்டல்கள்.. வைரலான வீடியோ.. தீவிர நடவடிக்கை தேவை!’

அமைச்சர் ஆனந்த் பரிந்துரையில் ரூ.5 முதல் 30 லட்சம் வரை லஞ்சம் பெற்றே அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தவெக விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி தவெகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்!

பின்னர் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் பெற்றதாக தேனி தெற்கு மாவட்டச் தவெக செயலாளர் லெஃப்ட் பாண்டி மீது எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

உங்க அண்ணன், உங்க விஜய் என வாய்கிழிய வெட்கமின்றி பேசும் விஜய் என்ன செய்து கொண்டிருக்கிறார்? எங்கு எங்கு என்னென்ன கமிசன் வாங்கலாம் என ஆலோசனைக் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறாரா?

ஊழலை ஒழிக்க வந்த உத்தமன் போல பேசிய விஜய்தான் நம்பர் 1 ஊழல்வாதியென காலம் காட்டிக்கொண்டிருக்கிறது! சட்டத்துறையை கையில் வைத்திருக்கும் RSS நிர்மல் குமார் பற்றி நாம் சொல்லவே வேண்டாம், என திமுக தகவல் தொழில்நுட்ப அணி கடுமையாக விமர்சித்துள்ளது.

banner

Related Stories

Related Stories