தமிழ்நாடு

நடிகர் அஜித்குமார் தாயார் காலமானார் : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

நடிகர் அஜித்தின் தாயார் மோகினி மணி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.

நடிகர் அஜித்குமார் தாயார்  காலமானார் : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், Racer-மான அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (85) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலை காலமானார்.

சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித்தின் இல்லத்தில் அவரது தாயாரின் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடிகர் அஜித்குமாரின் தந்தை காலமான நிலையில், தற்போது தாயாரும் மறைந்திருப்பது அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்தின் தாயார் மறைவுக்குத் திரை உலகப் பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இவரது இரங்கலில், அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார் மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.

அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்” என தெரிவித்துள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு அஜித்தின் தந்தை பி.எஸ். மணி காலமான நிலையில், தற்போது தாயாரும் மறைந்திருப்பது அவரது குடும்பத்தினரிடையே பேரிழப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

banner

Related Stories

Related Stories