அரசியல்

‘சிங்கப்பெண் திட்டம்’ ரத்தான நாளில்... பட்டு வேட்டி - சட்டையில் கலக்கிய ‘போட்டோ’ முதல்வர் விஜய்!

ரீல்ஸ் ஆட்சியின் பயணம் ரீலாகத் தொடர்ந்து வருகிறது!

‘சிங்கப்பெண் திட்டம்’ ரத்தான நாளில்... பட்டு வேட்டி - சட்டையில் கலக்கிய ‘போட்டோ’ முதல்வர் விஜய்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டில் ‘சினிமா’ எனும் மக்களுக்கு நெருக்கமான ஒரு துறையின் வழி பொழுதுபோக்கு திரைப்படங்களை அதிகளவில் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்த விஜய், அதே பாணியில் அரசியலையும் கையாண்டு ஆட்சியைப் பிடித்துள்ளார்.

‘ஆட்சி நிர்வாகம்’ எவ்வாறு செயல்படுகிறது என்ற அடிப்படையே தெரியாத பலரை அமைச்சர்களாக்கி, இதுவரை சட்டமன்ற உறுப்பினராகக் கூட இருந்திடாத விஜய், முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

இதனால், மாநிலந்தோறும் மின்வெட்டுகள், வளர்ச்சிப் பணிகள் நிறுத்தம், கொலை - கொள்ளைகள் அதிகரிப்பு என நிர்வாகத் தோல்வியில் பா.ஜ.க அரசை மிஞ்சி வருகிறது த.வெ.க அரசு.

குறிப்பாக, தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தலைவிரித்தாடி வருகின்ற நிலையில், தட்டிக்கேட்க வேண்டிய காவல்துறையே, பெண்களை வஞ்சித்து வருவது மேலும் வருத்தமளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

‘சிங்கப்பெண் திட்டம்’ ரத்தான நாளில்... பட்டு வேட்டி - சட்டையில் கலக்கிய ‘போட்டோ’ முதல்வர் விஜய்!

“மக்களிடையே மாற்றத்தை உண்டாக்குவோம்” என மக்களையே சந்திக்காமல் வாய் சவடால் விட்டே முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்துள்ள விஜய் அவர்கள், இதுவரை தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு குறித்து வாய்திறக்காதது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், அவை எதனையும் பற்றி கவலைப்படாத விஜய் அவர்களோ... டெல்லி சென்று இல்லாத மெட்ரோ திட்டங்களுக்கு நிதி கோரிக்கை வைத்து வருவது; மக்களின் குரலாக செயல்படும் ஊடகங்களை அறவே புறக்கணிப்பது; நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைகளில் மந்தம் காண்பிப்பது; நாள்தோறும் புகைப்படங்களுக்கு நேரம் ஒதுக்குவது என முழுநேர (காலை 10 மணி முதல் மாலை 6 வரை) அரசுப் பணியாளராய் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார்.

இவ்வேளையில், தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘சிங்கப்பெண் திட்டம்’ தொடங்கப்படும் என பதவியேற்ற முதல் நாளிலேயே கையெழுத்திட்ட முதலமைச்சர் விஜய் அவர்களால், இன்று (மே 29) அந்த திட்டம் தொடங்க இருந்த நிலையில் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இன்று சிங்கப்பெண் திட்டத்தை தொடங்கி வைப்பதற்கு பதிலாக, தனது மேலாளர் ஜெகதீஸ் இல்லத் திருமணத்திற்கு பட்டு வேட்டி - சட்டையுடன் அசத்தலாக சென்றுள்ளார் முதலமைச்சர் விஜய்.

அதுமட்டுமல்ல, தனது நாயகர் தோற்றம் துவண்டு விடக்கூடாது என்ற நோக்குடன், அதே பட்டு வேட்டி - சட்டையுடன் தலைமைச் செயலகமும் சென்று வளைத்து வளைத்து புகைப்படமும் எடுத்திருக்கிறார் நம் புகைப்பட விரும்பி, ‘போட்டோ’ முதல்வர் விஜய்.

இதனால், ரீல்ஸ் ஆட்சியின் பயணம் ரீலாகத் தொடர்ந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories