தமிழ்நாடு

6 வயது மகளுக்காக... தவெக அமைச்சர் மரிய வில்சன் மீது புகார்.. நீதிமன்றம் வரை சென்ற பெண்... பின்னணி என்ன?

தனது 6 வயது மகளை சட்டவிரோதமாக வைத்திருப்பதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் மீது, அவரது சகோதரரின் மனைவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

6 வயது மகளுக்காக... தவெக அமைச்சர் மரிய வில்சன் மீது புகார்.. நீதிமன்றம் வரை சென்ற பெண்... பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நிதி அமைச்சர் மரிய வில்சன் தனது 6 வயது தத்தெடுத்த மகளைச் சட்டவிரோதக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறி, குழந்தையை மீட்டுத் தரவும், அமைச்சர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யக் காவல்துறைக்கு உத்தரவிடவும் கோரி அவரது சகோதரரின் மனைவி கேர்லைன் கிளாட் செங்கல்பட்டு நீதித்துறை நடுவர் நீதிமன்றம்-I-ல் (Judicial Magistrate - I) மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் மரிய வில்சனின் சகோதரர் மனைவியான கேர்லைன் கிளாட், செங்கல்பட்டு நீதித்துறை நடுவர் நீதிமன்றம்-I-ல் (வழக்கு எண்: CRL.M.P. No. 2716 of 2026) தாக்கல் செய்துள்ள மனுவில்,

"எனது 6 வயது தத்தெடுத்த மகளைத் தமிழக நிதி அமைச்சர் மரியா வில்சன் தனது சட்டவிரோதக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். என் மகளை மீட்டுத் தருமாறு காவல்துறையில் பலமுறை புகார் அளித்தும், இதுவரை காவல்துறை தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, நீதிமன்றம் இதில் தலையிட்டு எனது மகளை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும்.

மேலும், குழந்தையைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருக்கும் மரியா வில்சன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என கோரியுள்ளார்

காவல்துறையின் நடவடிக்கையின்மையைச் சுட்டிக்காட்டி கேர்லைன் கிளாட் தாக்கல் செய்துள்ள இந்த மனு, செங்கல்பட்டு நீதித்துறை நடுவர் நீதிமன்றம்-I-ல் நாளை 20.11.2026 - வெள்ளிக்கிழமை விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

மாநில நிதி அமைச்சர் மீது அவரது உறவினரே குழந்தையைச் சட்டவிரோதமாக வைத்திருப்பதாக நீதிமன்றத்தை நாடியுள்ளார், மேலும் அவரின் சகோதரர் சொத்து பிரச்சனையில் தாக்கியது வழக்கும் நிலுவையில் உள்ளது.

banner

Related Stories

Related Stories