
தமிழ்நாட்டில் மார்ச் 2 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. சுமார் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
இதில், 7 லட்சத்து 53 ஆயிரத்து 694 மாணவர்கள் (95.20%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகேளே இந்த ஆண்டும் 3.81% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 0.17% தேர்ச்சி கூடுதலாக உள்ளது. மேலும் 2,639 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. அதேபோல் 489 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.
மேலும், கணினி அறிவியல் பாடத்தில் 6,945 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதற்கு அடுத்து கணினிப் பயன்பாடுகள் பாடத்தில் 2,099 மாணவர்களும், கணிக்குப் பதிவியல் பாடத்தில் 1,946 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்களை பொற்றுள்ளனர்.
அதேபோல், தமிழ்பாடத்தில் 83 மாணவர்களும், ஆங்கில பாடத்தில் 18 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளன. ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் 16,024 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளன.
இந்த தேர்தல் முடிவில் ஈரோடு மாவட்டம் 98.8 சதத்துடனும், சிவகங்கை மாவட்டம் 98.05% இரண்டாம் இடமும், கன்னியாகுமரி மாவட்டம் 97.63% மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பார்த்துக் கொள்ளலாம்.






