தமிழ்நாடு

”வாக்கு எண்ணும் மையங்களில் பாஜக சதித்திட்டம்.. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சொன்ன பகீர் தகவல்!”

தமிழ்நாட்டில் நாளை (மே 4) நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு எண்ணும் மையங்களில் பாஜக-வினர் சதி செய்ய திட்டமிட்டுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

”வாக்கு எண்ணும் மையங்களில் பாஜக சதித்திட்டம்.. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சொன்ன பகீர் தகவல்!”
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மே 3) திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

முன்னதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதி இருந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நடத்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி ஆகிவிட்டது.

அனைத்து தரப்பு மக்களும் தளபதி தான் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க போகிறார் என்ற கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஏதேனும் வாக்கு எண்ணும் மையத்தில் திட்டமிட்டு ஏதேனும் செய்ய உள்ளார்கள் என்ற சமூக ஊடகங்களில் வருகிற செய்தியை அடிப்படையாக கொண்டு வரும் சந்தேங்களின் அடிப்படையில் எந்த புகார் வந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம்.

”வாக்கு எண்ணும் மையங்களில் பாஜக சதித்திட்டம்.. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சொன்ன பகீர் தகவல்!”

புகார் வரும் போது நடவடிக்கை எடுக்கிறோம் என கூறுவார்கள். ஆனால், மாலை வரை எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள். அதனால் தான் முன்கூட்டியே கடிதம் எழுதி உள்ளோம் என கூறினார்.

இரண்டு ஆண்டுகளாக SIR உள்ளிட்ட பல பணிகளில் திமுக கூட்டணிகள் இணைந்து சிறப்பாக பணியாற்றி உள்ளார்கள். அதனை கெடுக்கும் நோக்கில் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்வார்கள். தேர்தல் ஆணையம் பாஜகவின் B டீமாக செயல்படுகிறது எனவும் தெரிவித்தார்.

பொதுவாக வாக்கு எண்ணும் மையங்களில் எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் வர கூடாது என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம் என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories