தமிழ்நாடு

”கொத்தடிமை ஒழிப்பு நடவடிக்கை.. இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு”! - முழு விவரம்!

கொத்தடிமை வழக்குகளில் தண்டனை பெற்றுக்கொடுத்ததில் சிறப்பாக பணியாற்றியதற்காக இண்டெர்னேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

”கொத்தடிமை ஒழிப்பு நடவடிக்கை.. இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு”! - முழு விவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

கொத்தடிமை வழக்குகளில் தண்டனை பெற்றதில் சிறப்பு சாதனை - தமிழ்நாடு அரசு மற்றும் மாநில அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னாவுக்கு International Justice Mission பாராட்டு.

கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்பது, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது, மற்றும் கொத்தடிமை முறையை ஆதரிக்கும் குற்றவாளிகளுக்கு எதிரான வழக்குகளில் சிறப்பு கவனம் செலுத்தி, தொடர்ச்சியான சுற்றறிக்கைகள் மூலம் விரைவான தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசிற்கும், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட்ட மாநில அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னாவுக்கும் பாராட்டு தெரிவித்து இண்டெர்னேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் கடிதம் அனுப்பியுள்ளது.

சர்வதேச நீதி மிஷன் International Justice Mission (IJM) ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனம், Tamil Nadu State Judicial Academy-யின் கொத்தடிமை முறையால் பாதிக்கப்பட்டோருக்கான ஆய்வரங்குகளில் ஆதார நிபுணராக (Resource Person) பங்களித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த கடிதத்தை தமிழ்நாடு மாநிலத்தின் அட்வ்கெஸி ப்ரஸிடெண்ட் ரேச்சல் பிரசன்னா, மாநில அரசு தலைமை குற்றவியியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னவுக்கு எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், மாநில அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா , சிறப்பு கவனம் செலுத்தி, மாநில காவல்துறை மற்றும் குற்ற வழக்குத் தொடர்வு இயக்கக வழக்குரைஞர்களுடன் இணைந்து, கொத்தடிமைத் தொழிலாளர் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதில் முனைப்புடன் செயல்பட்டுள்ளதாகவும்,

கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2026 ஏப்ரல் வரை உள்ள காலகட்டத்தில் மட்டும், 12 கொத்தடிமைத் தொழிலாளர் வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளதாகவும், இது அவர்களின் தொடர் முயற்சி மற்றும் துறைகள் இடையேயான ஒருங்கிணைந்த செயல்பாட்டின் விளைவாக சாத்தியமானதாகவும் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.

”கொத்தடிமை ஒழிப்பு நடவடிக்கை.. இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு”! - முழு விவரம்!

அதேபோல், Tamil Nadu State Judicial Academy மற்றும் நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் சரவணன் ஆகியோரின் ஊக்கத்துடன், கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பை முன்னெடுக்க நீதிபதிகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டதையும், 2025 நவம்பர் மாதத்தில் மறுவாழ்வு மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வரங்கமும் நடைபெற்றதையும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவ்வகை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் மற்றும் குற்ற வழக்குத் தொடர்வு இயக்ககம், காவல்துறையினருடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு 60 நாட்களுக்குள் வழக்கை முடிக்க வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டதையும், சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டதையும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதில் அரசு காட்டும் முனைப்பையும், பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளிப்பதில் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு முயற்சிகளையும், கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அவர்களை சமூகத்தில் மீளச் சேர்க்கும் பணிகளையும் பாராட்டி, அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள், குற்ற வழக்குத் தொடர்வு இயக்ககம், நீதித்துறை, காவல்துறை மற்றும் தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலம், இம்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி கிடைத்திருக்கிறது, தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories