விளையாட்டு

“FIFA உலகக்கோப்பை.. யாரும் தொட முடியாத இரட்டை சாதனை.. மிரட்டும் ரொனால்டோ” : முழு விவரம் அறிக!

FIFA உலகக்கோப்பை தொடரில் உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 2 கோல்கள் அடித்ததன் மூலம், 6 ஆண்டுகள் வெவ்வேறு கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளில் கோலகள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் ரொனால்டோ.

“FIFA உலகக்கோப்பை.. யாரும் தொட முடியாத இரட்டை சாதனை.. மிரட்டும் ரொனால்டோ” : முழு விவரம் அறிக!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

FIFA உலகக்கோப்பை தொடர் 2026-க்கான போட்டிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று (ஜூன் 23) நடந்த உஸ்பெகிஸ்தான் உடனான போட்டியில் போர்ச்சுகல் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அதிரடி வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியின் மூலம் போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, உலகக் கோப்பை வரலாற்றில் புதிய சாதனை படைத்து அவர் மீதான விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

குரூப் K பிரிவில் உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் போர்ச்சுகல் 3-0 என்ற கோல் கணக்கில் ஆதிக்கம் செலுத்தியது. இந்தப் போட்டியில் ரொனால்டோ இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார்.

போட்டியின் தொடக்கத்திலேயே ஜோவோ கான்செலோ அளித்த துல்லியமான கிராஸை சக்திவாய்ந்த ஷாட்டாக மாற்றிய ரொனால்டோ, அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார்.

இதன் மூலம் 2006, 2010, 2014, 2018, 2022 மற்றும் 2026 என ஆறு வெவ்வேறு உலகக் கோப்பை தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார்.

“FIFA உலகக்கோப்பை.. யாரும் தொட முடியாத இரட்டை சாதனை.. மிரட்டும் ரொனால்டோ” : முழு விவரம் அறிக!

இதற்கு முன் DR காங்கோவுக்கு எதிரான முதல் போட்டியில் போர்ச்சுகல் டிரா செய்ததைத் தொடர்ந்து, ரொனால்டோவின் ஆட்டம் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக முன்னாள் பிரான்ஸ் நட்சத்திரம் தியரி ஹென்றி, ரொனால்டோவின் ஆட்டத்தை சுயநலம் என காட்டமாக விமர்சித்திருந்தார்.

ஆனால், அதே வகையான நகர்வின் மூலம் உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக கோல் அடித்த ரொனால்டோ, தனது திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார்.

போர்ச்சுகலின் இரண்டாவது கோலுக்கும் ரொனால்டோ மறைமுகமாக பங்களித்தார். அவரது நகர்வு காரணமாக ஏற்பட்ட இடைவெளியை பயன்படுத்தி நூனோ மெண்டஸ் ஃப்ரீகிக்கில் கோல் அடித்தார். இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. பின்னர் புருனோ பெர்னாண்டஸ் வழங்கிய அற்புதமான பாஸை கோலாக மாற்றிய ரொனால்டோ தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்த சாதனையின் மூலம் ரொனால்டோ, உலகக் கோப்பையில் போர்ச்சுகலுக்காக கோல் அடித்த இளம் வீரர் மற்றும் அதிக வயதில் கோல் அடித்த வீரர் என்ற இரட்டை பெருமையையும் தக்க வைத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories