
இந்தியாவின் மாநிலங்களை ஒப்பிடும் வகையில் மட்டுமே இருந்துவிடாமல், தெற்காசியாவிலேயே தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தனித்துவமாக முன்னெடுத்து செல்லும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு தொழில்துறையிலும், இதர துறைகளிலும் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் வெளிப்பாடாக, தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்து வெற்றிப் பயணத்தில் தொடர்ந்து வருகிறது என ஒன்றிய புள்ளியல் விவரமே உறுதிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, 2024 - 25 நிதியாண்டில் 11.19% பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்த தமிழ்நாடு, அமெரிக்காவின் அதிகப்படியான வரிவிதிப்பு - மேற்காசிய போர் பதற்றம் உள்ளிட்ட பல தடைகளையும் கடந்து 2025 - 26 நிதியாண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியை (10.83%) பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
இதனைச் சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது பின்வருமாறு,
“திராவிட மாடல் ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது, திராவிட நாயகரான
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரவணைப்பில் வளரும் நம் தமிழ்நாடு!
இது சாதாரண வளர்ச்சி அல்ல, திட்டமிட்ட முன்னேற்றம் என்பதையே இது நிரூபிக்கிறது. இதுவே அனைவரையும் உள்ளடக்கிய பரவலாக்கப்பட்ட திராவிட மாடல் வளர்ச்சி!

இதில் முக்கிய தகவல் என்னவென்றால், இந்திய அளவில் இது அதிகம் என்பதைக் கடந்து, ஏற்கனவே உயர்ந்து இருக்கும் ஒரு மாநிலம் இவ்வளவு வேகத்தில் வளர்வது உலக அளவிலும் அரிது!
இது சாதாரணமாக கிடைத்த வளர்ச்சி அல்ல. உழைப்பு உழைப்பு உழைப்பு மிகக் கடின உழைப்பினால் கிடைத்த வெற்றி.
தி.மு.க ஆட்சியின் முந்தைய காலங்களிலும் இதேபோன்ற வலுவான வளர்ச்சி பதிவாகியுள்ளது.
தொடர்ந்து 15–20 ஆண்டுகள் இப்படியான வளர்ச்சி நடந்தால், சீனா, தென் கொரியா போன்ற வளர்ச்சி இங்கேயும் நிச்சயம் சாத்தியம் தான் !
2030-க்குள் தமிழ்நாட்டை $1 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை உறுதியாக தனது கையில் எடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
இந்த வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளும் தொடரும்.
இந்த பாதையை வலுப்படுத்தி, முதலீடு, தொழில், வேலைவாய்ப்பு வளர்ச்சியை முன்னெடுத்து வரும் மாண்புமிகு திராவிட நாயகன் அவர்களின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது!
தமிழ்நாடு வளர்கிறது. தமிழ்நாடு வழிகாட்டுகிறது. தமிழ்நாடு தொடர்ந்து வெல்லும்.”








