மு.க.ஸ்டாலின்

“தொடர்ந்து 2 ஆண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

“நம்முடைய போட்டி என்பது மற்ற இந்திய மாநிலங்களுடன் அல்ல; தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும்!”

“தொடர்ந்து 2 ஆண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு தொழில்துறையிலும், இதர துறைகளிலும் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் வெளிப்பாடாக, தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்து வெற்றிப் பயணத்தில் தொடர்ந்து வருகிறது என ஒன்றிய புள்ளியல் விவரமே உறுதிப்படுத்தியுள்ளது.

2024 - 25 நிதியாண்டில் 11.19% பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்த தமிழ்நாடு, அமெரிக்காவின் அதிகப்படியான வரிவிதிப்பு, மேற்காசிய போர் பதற்றம் உள்ளிட்ட பல தடைகளையும் கடந்து 2025 - 26 நிதியாண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியை (10.83%) பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டதாவது,“தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை! திராவிட மாடல் தனித்துவமான மாடல்!

“தொடர்ந்து 2 ஆண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்!

முதல் மூன்றாண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம். சிறப்பான நமது நிர்வாகத்திற்கு, உழைப்பால் துணை நின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி!

இது தொடக்கம்தான். உங்கள் துணையோடு இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி!

நம்முடைய போட்டி என்பது மற்ற இந்திய மாநிலங்களுடன் அல்ல; தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும்!” என்றார்.

இதனையடுத்து, இந்த வளர்ச்சியை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டு மக்கள் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களின் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories