தமிழ்நாடு

”வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்... வடக்கு முதல் மேற்கு வரை முந்தி நிற்கும் திமுக” : முழு விவரம் அறிய!

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் குறித்து லோக்பால் என்ற நிறுவனம் வெளியிட்ட முடிவுகளில் 189 தொகுதிகள் வரை கைப்பற்றி மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டுள்ளது.

”வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்... வடக்கு முதல் மேற்கு வரை முந்தி நிற்கும் திமுக” : முழு விவரம் அறிய!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரங்கள், தேர்தல் வாக்குறுதிகள் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியினர் கடுமையாக ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைவதை மக்களும் உறுதிப்படுத்தி வருகின்றனர். அதற்கு சாட்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரச்சாரங்களில் ஈடுபடும் போது மக்கள் தரும் பெரும் வரவேற்பே திராவிட மாடல் 2.O ஆட்சி அமைவதை ஆணித்தரமாக நிரூபணம் ஆகி வருகிறது.

இந்நிலையில், லோக்போல் என்ற தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் திராவிட மாடல் ஆட்சி அமையும் என்பதை உறுதி செய்யும் விதமாக முடிவுகள் வந்துள்ளன.

”வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்... வடக்கு முதல் மேற்கு வரை முந்தி நிற்கும் திமுக” : முழு விவரம் அறிய!

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 1,17,000 நபர்களிடம், தொகுதிக்கு 500 பேர் வீதம் நடந்த கருத்துகணிப்பின் முடிவுகளை வெளியிட்டுள்ளது லோக்போல் நிறுவனம். இதில், 40.1 சதவீத வாக்குகளுடன் 181 முதல் 189 தொகுதிகள் வரை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கைப்பற்றி, திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

வாக்கு சதவீதத்தினைப் பொறுத்தளவு 29 சதவீத வாக்குககளுடன் அதிமுக2ம் இடம் என அடுத்தடுத்த கட்சிகள் உள்ளன.

மண்டலங்கள் வாரியாக வெளியாகியுள்ள தொகுதி முடிவுகளின்படி வடக்கு மண்டலத்தில் 53-56 தொகுதிகள் திமுக கூட்டணி கைப்பற்றுகிறது. மேற்கு மண்டலங்களான கோவை, ஈரோடு, சேலம், கரூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 44 முதல் 46 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றுவதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதேபோல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட தென்மண்டல தொகுதிகளில் 45 முதல் 47 தொகுதிகளையும், டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, தஞ்சாவூர் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 39 முதல் 40 தொகுதிகள் வரை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் கைப்பற்றுகின்றன என லோக்போல் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதற்கடுத்தபடியாக, தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் விருப்பத் தேர்வில் யார் உள்ளனர் என எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 41 சதவீத மக்கள் ஆதரவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிடத்தில் உள்ளார்.

”வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்... வடக்கு முதல் மேற்கு வரை முந்தி நிற்கும் திமுக” : முழு விவரம் அறிய!

கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் 129-134 தொகுதிகளைப் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என லோக்பால் நிறுவனம் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்ட நிலையில், 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டு மக்களின் பெருவாரியான ஆதரவினைப் பெற்று திராவிட மாடல் 2.O ஆட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைவது உறுதி என்பதனையே கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன.

banner

Related Stories

Related Stories