தமிழ்நாடு

திருவிழா போல் காட்சியளிக்கும் அண்ணா அறிவலாயம் : ஒரு புறம் கூட்டணி பேச்சு - மற்றொரு புறம் விருப்ப மனு!

தி.மு.க சார்பில் தேர்தலில் போட்டியிட, நிர்வாகிகள், அமைச்சர்கள், தொண்டர்கள் என பலரும் ஆர்வமுடன் விருப்ப மனுக்களை வழங்கி வருகின்றனர்.

திருவிழா போல் காட்சியளிக்கும் அண்ணா அறிவலாயம் : ஒரு புறம் கூட்டணி பேச்சு - மற்றொரு புறம் விருப்ப மனு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கியதை அடுத்து அனைத்துக் கட்சிகளுமே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. சட்டமன்றத் தேர்தலுக்காக தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அண்மையில் கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவினர், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டு, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருவிழா போல் காட்சியளிக்கும் அண்ணா அறிவலாயம் : ஒரு புறம் கூட்டணி பேச்சு - மற்றொரு புறம் விருப்ப மனு!

மேலும், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகக் கழகப் பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் ஒரு குழு அண்மையில் அறிவிக்கப்பட்டது. இக்குழுவினர் கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடைபெற்று வரும் அதே வேளையில், தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிப்ரவரி 20-ஆம் தேதி தொடங்கியது. அன்றிலிருந்தே அண்ணா அறிவாலயம் காலை முதல் இரவு வரை விழாக்கோலமாகக் காட்சியளித்து வருகிறது.

திருவிழா போல் காட்சியளிக்கும் அண்ணா அறிவலாயம் : ஒரு புறம் கூட்டணி பேச்சு - மற்றொரு புறம் விருப்ப மனு!

தி.மு.க. தொண்டர்கள் முதல் அமைச்சர்கள் வரை பலரும் மேளதாளங்கள் முழங்க ஆர்வத்துடன் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு விருப்ப மனுக்களை வழங்கி வருகின்றனர். சுமார் 13 நாட்களுக்கும் மேலாக விருப்ப மனுக்கள் பெறும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காகக் கூட்டணித் தலைவர்கள் தினந்தோறும் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். 'தேர்தல் ஒரு திருவிழா' என்று சொல்வதை மெய்ப்பிக்கும் வகையில் அண்ணா அறிவாலயம் தினந்தோறும் களைகட்டி வருகிறது.

banner

Related Stories

Related Stories